Saturday, November 16, 2013

காளான் குழம்பு

காளான்மிளகுதேங்காய் துண்டுகள்
தேவையான பொருள்கள்:
  1. காளான் = ஒரு கப்
  2. சின்ன வெங்காயம் = 10
  3. தேங்காய் துண்டுகள் = 2
  4. சீரகம் = 1ஸ்பூன்
  5. மிளகு = 3 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
  7. தனியா தூள் = 2 ஸ்பூன்
  8. கறிவேப்பிலை = தேவையான அளவு
  9. எண்ணெய் = தேவையான அளவு
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • காளானை சிறியதாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய், சீரகம் மற்றும் மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய காளான், சின்ன வெங்காயம், அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக வைக்கவும்.
  • சிறிது வெந்ததும் மூடியை திறந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகும் வரை கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி வைத்து இறக்கவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான காளான் குழம்பு தயார். இதை சாதத்தோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • காளானில் கொழுப்பு சத்து மிகவும் குறைவு. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நீர் மற்றும் ஃபைபர் காணப்படுகிறது.
  • நீரிழிவு உடையவர்கள் காளானை எடுத்து கொள்வதால் தொற்று நோய்கள், வீக்கம் போன்றவை குறைகிறது.
  • காளானில் இரும்பு, தாமிரம், பொட்டாசியம், செலினியம் இருப்பதால் இரத்த அழுத்தம் குறையும். இரத்த சோகை வராது. நகங்கள், பற்கள், எலும்புகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.

No comments: