சர்க்கரை நோய் என்றாலே அனைவருக்கும் அலர்ஜிதான். இதை சாப்பிடக்கூடாது அதை சாப்பிடக் கூடாது என்று பல விதி முறைகள். நன்றாக சமைத்தாலும் உண்ண முடியாத நிலை இருக்கும். இனிப்பை மிகவும் விரும்பி உண்பவர்களுக்கோ சொல்லவே வேண்டாம். இனிப்பின் கிட்டவே நெருங்க கூடாது என்ற நிலை.
இப்படி சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் சோர்வாகவும், உடல் வலியையும் உணர்வார்கள். இதில் காயம் ஏற்பட்டால் உடனே சரி ஆகாமல் படாத பாடு படுவார்கள். சர்க்கரை நோயால் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதி கால் தான். நம் உடலின் முழு பலத்தையும் தாங்குவது கால் தான்.
சர்க்கரை நோய் உள்ளவர்களின் கால்களுக்கு சரியான இரத்த ஓட்டம் கிடைக்காமல், அதிக வலியை ஏற்படுத்தும். உடல் அழுத்தமும், இரத்த அழுத்தமும் அதிகமாக ஏற்படுவதால், கால் வலி பல மடங்கு அதிகமாகி சிரமத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு சரியான அளவில் இரத்தம் ஓட்டம் கிடைக்காமல் கால் வீங்குகின்றது. கால் வீங்குவதுடன் வலியும் அதிகம் ஏற்படுகின்றது.
சில நேரங்களில் கால் வீங்குவதற்கு மற்ற காரணங்கள் கூட இருக்கலாம். இதை சரியான முறையில் ஆராய்ந்தால் தான் கண்டுபிடிக்க முடியும். இரத்த ஓட்டம் சரியாக இல்லாத காரணத்தால் தான் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு புண் ஏற்பட்டால் விரைவில் குணமாவது இல்லை.
சர்க்கரை நோய் மருத்துவரான டாக்டர். பூஷன் கூறுவது: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால் வலி இருக்கும். இதை கண்டு கொள்ளாமல் இருந்தால், கால் புற்றுநோய் போன்ற பலவித நோய்கள் வரலாம் என்று கூறுகின்றார். எனவே இந்த பிரச்சனை மீது கவனம் எடுத்து எப்படி இதில் இருந்து விடுபடுவது என்று இங்கு காண்போம்.
தினமும் உடற்பயிற்சி...
தினமும் உடற்பயிற்சி செய்வதால் எலும்புகளையும், தசைகளையும் வலிமை பெற செய்ய முடியும் என்று திரு.ஹிமேடு கூறுகின்றார். மேலும், இதனால் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த முடியும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். மேலும் கடினமான உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது என்று இவர் கூறுகின்றார்.
கால்களை உயரே தூக்கவும்...
நெஞ்சுக்கு மேல் கால்களை 10-15 நிமிடத்திற்கு தூக்கி வைப்பது நல்லது. இப்படி செய்யும் போது அடியில் தலையணை வைத்து செய்தால் விழாமல் செய்ய முடியும். இந்த பயிற்சியால் கால் வீக்கம் குறையும். இந்த பயிற்சி தேவையற்ற திரவம் சுரப்பதை தவிர்த்து கால்களை சுற்றியுள்ள திசுக்களுக்கு வலிமை தருகின்றது.
அழுத்தம் கொடுக்கும் காலுறைகள் தேவை...
சுருங்கும் தன்மை கொண்ட காலணிகள் கிடைகின்றன. இவை இறுக்கம் கொடுப்பதுடன் வலிக்காமலும் பார்த்து கொள்கின்றன. இவற்றை பாதிக்கப்பட்ட இடங்களின் மீது இறுக்கமாக கட்டினால் வீக்கத்தை குறைக்க முடியும் இதனால் இரத்த ஓட்டத்தை சீராக்கவும் முடியும். மெல்லிய இறுக்கம் கொடுக்கும் காலுறைகளை அணிந்து கொள்வதால் முட்டிக்கு கீழ் பகுதியில் இருக்கும் வீக்கத்தையும் வலியையும் குறைக்க முடியும்.
அதிகம் உப்பு வேண்டாம் ...
டயட் சரியான அளவில் இருந்தால் சர்க்கரை நோயால் வரும் வீக்கத்தை தவிர்க்க முடியும். உட்கொள்ளும் உணவில் உப்பு கம்மியாகவும், சோடியம் குறைவாக உள்ள உணவையும் சாப்பிட வேண்டும். இதனால் இரத்த அழுத்தம் உயராமல் கால் வீங்குவதை தவிர்க்கலாம்.
பொருத்தமான ஷூவை அணியவும் ...
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இருக்கமான ஷூவை அணிய கூடாது. சிறிது பெரியதான அளவில் ஷூ வாங்குவது நல்லது. இதனால் கால் வீங்கினாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படாமல் இருக்கும். சர்க்கரை நோய் உள்ள பெண்கள் ஹை ஹீல்ஸ் கொண்ட செருப்பு அணியக்கூடாது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு என்று தனியாக செய்யப்படும் செருப்பையும் ஷூவையும் அணிவது நல்லது என்று திரு. பூஷன் கூறுகின்றார்.
கால்களுக்கு மசாஜ் தேவை ...
நன்றாக கால்களுக்கு மசாஜ் தர வேண்டும். இதனால் பல பலனை பெற முடியும். இவ்வாறு மசாஜ் தருவதால், கால்களுக்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக கிடைக்கும். இதனால் கால்களுக்கு ஏற்படும் வீக்கமும் வலியும் குறையும்.
அதிகம் எதுவும் வேண்டாம்...
அதிக நேரம் உட்காரவோ நிற்கவோ கூடாது. அதிக நேரம் நின்றாலோ அமர்ந்தாலோ மறத்து போகும் வாய்ப்பு உள்ளது. கால் மேல் கால் போட்டு அமர்வதாலும், காலை மடக்கி அமர்வதாலும், இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் என்பதால் இதையும் தவிர்ப்பது நல்லது.

No comments:
Post a Comment