தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி. தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தையாவது எரித்துவிட வேண்டும்.
இந்துக்கள் தீபாவளி கொண்டாடுவதற்குப் பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். புராணக் கதைகளின் படி, கிருஷ்ணனின் இரு மனைவியருள் ஒருவரான நிலமகளுக்குப் பிறந்த மகன் ஓர் அசுரன். அப்போது கிருஷ்ணன் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான்.
பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று