இப்போது, பொதுவாக எல்லா டாக்டர்களுமே குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து பெற்றோர்களுக்கு சொல்லும் அறிவுரை... ‘‘தினமும் முட்டை கொடுங்க!’’ என்பதுதான். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் ஏற்ற சரிவிகித உணவு முட்டை என்பதுதான் அதன் ஸ்பெஷல்! அதோடு, சுலபமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது என்பதுடன், அதை சமைப்பதும் எளிதுதான்.
ஆனால், ‘நீங்க என்னதான் சொல்லுங்க... முட்டையை வேக வைச்சுக் கொடுக்கிறது, ஆம்லெட், ஆஃப் பாயில் மாதிரி சில அயிட்டங்கள் தவிர வேற என்னதான் செஞ்சு கொடுக்கிறது முட்டையில?’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்காகவே, உங்களுக்கு ‘மினி பிரியாணி மேளா’ மூலம் நன்கு அறிமுகமான கலைச்செல்வி சொக்கலிங்கம், பிரமாதமான 15 ரெசிபிகளை வழங்கி இருக்கிறார்.
எல்லாமே மிக எளிமையான செய்முறைகள்தான். எனவே முட்டைகளை வாங்கி, விதம் விதமாக, ருசி ருசியாக