Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Saturday, July 19, 2014

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!
இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில்

Saturday, March 29, 2014

நவகிரகங்களை ஒரே நாளில் சுற்றிப்பார்ப்பது எப்படி???


தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளது. இவை அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே, அந்நகரை சுற்றி அமைந்திருக்கின்றன. எனவே சரியான முறையில் திட்டமிட்டால் எல்லா ஸ்தலங்களையும் ஒரே நாளில்

Tuesday, December 24, 2013

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதி உள்ள இடங்களும்




1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் க...ோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள

Sunday, November 17, 2013

நவக்கிரக தலங்கள்


ஜோதிட சாஸ்திரம் மற்றும் கோள்களின் நிலைபாடு,அவற்றின் தாக்கம் ஓருவரின் வாழ்வில் ஏற்படுத்தும்
பாதிப்புகளில் நம்பிக்கையுள்ளவர்கள் அதற்கான பரிகாரங்கள் செய்ய தமிழ்நாட்டில் புகழ்பெற்ற
கோவில்கள் உள்ளன.'நவ' என்றால்ஒன்பது என்றும் 'கிரகம்' என்றால் கோள் என்றும் பொருள்படும்.
நவக்கிரகம் என்று அழைக்கப்படும் ஒன்பது கோள்களை குறிக்கும் தெய்வங்களுக்கான கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன.அவை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 60கி.மீ சுற்றில் அமைந்துள்ளது.
   

வரைப்படத்தை கிளிக் செய்யவும்
கோள்
கோவில்
சூரியன்
சூரியனார் கோவில்
சந்திரன்
திங்களூர் கோவில்
செவ்வாய்
வைத்தீஸ்வரன் கோவில்
புதன்
திருவெங்காடு
குரு
ஆலங்குடி
சுக்கிரன்
கஞ்சனூர்
சனி
திருநள்ளாறு
ராகு
திருநாகேஸ்வரம்
கேது
கீழ்பெரும்பள்ளம்
   
   
   
 
கிமு 1100-ல் ஆண்டு முதலாம் குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் சுவாமிமலையி-
லிருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது.இக்கோவிலில் குடிகொண்டுள்ள சூரியனார் ஆரோக்கியம்,
வெற்றி,வாழ்வில் செழுமை ஆகியவற்றை அளிக்க வல்லவர். பயிர், பச்சைகள் செழித்துவளர
ஓளிவழங்கும்  சூரியனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில்
அறுவடைதிருவிழா கொண்டாடப்படுகிறது.
 
 
  
   
 
இக்கோவில்  கட்டப்பட்ட  காலம் கி.மு  7-ஆம் நூற்றாண்டாக  இருக்ககூடுமென  கருதப்படுகிறது.
சந்திரகடவுளுக்காக அமைக்கப்பட்ட  இக்கோவிலுக்கு சென்று வருவதால் நீண்ட  ஆயுளும்,
சுகமான வாழ்வும் கிடைக்கப் பெறும்.ஜோதிட சாஸ்திரப்படி,சந்திரனார் துன்பங்களையும்,
துயர்களையும் துடைக்கவல்லவர்.
 
 
  
   
 
இக்கோவில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் கடவுளுக்கு தனி சந்நிதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கடவுளை வணங்குபவருக்கு தைரியம்,வெற்றி பலம் ஆகியவை கிட்டும் என நம்ப்படுகிறது.
இக்கோவிலுக்குள்  நுழைந்தவுடன் பக்தர்கள்  ' சித்தமிருத்தா' குளத்திற்குச்  சென்று  தங்களை
தூய்மைப்படுத்திக் கொள்வது வழக்கம். இத்தண்ணீருக்கு  தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளை
சுகப்படுத்தும் தன்மை உண்டு என்றும் நம்பப்படுகிறது.
 
 
  
    
 
வால்மீகி ராமாயணத்தில் இத்திருத்தலம்பற்றிய குறிப்பு உள்ளது.எனவே 3000 வருடங்களுக்கு
மேலான பழமை  வாய்ந்த  இக்கோவில்  புதனாருக்காக  ஏற்படுத்தப்பட்டதாகும்.  நவக்கிரக
கோயில்களில் திருவெங்காடு கடைசிக் கோவிலாகும்.புதனின் அருள்பார்வையால் அறிவும்,புத்தி
சாதூர்யமும் கிட்டும்.
 
    
 
குருவிற்கான  தலமாகும். இங்கு  குருவின் அதிபதியான தட்சணாமூர்த்தி கடவுள் ஆராதிக்கப்
படுகிறார்.மற்ற கோள்களுக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகும்போது இத்தலத்தில் சிறப்பு
பூஜைகள் செய்யப்படுவதால் பக்தர்கள் கூட்டம்  அலைமோதும்  சிவபெருமானிடமிருந்து  பிரிந்த
பார்வதிதேவி  மீண்டும் சிவனுடன் இணைவதற்கு முன் இங்குள்ள அமிர்தபுஷ்கர்னி கரையில்
பிறப்பெடுத்ததாக புராணம் கூறுகிறது.
 
 
  
    
 
சிவதலமான  கஞ்சன்னூர்  சுக்கிரனின்  தலமாக கருதப்பட்டு  மதுரை  ஆதினத்தால் பாதுகாக்கப்
பட்டு வருகிறது.திருவாவடுதுறை என்ற இடத்தில் இவ்வூர் உள்ளது இத்திருத்தலம்  பாலசவனம்,
பிரம்ம்புரி அக்னிஸ்தலம் என்றும் அறியப்படுகிறது.சிவ,பார்வதி திருமண காட்சியை பிரம்மா
இத்தலத்திலிருந்து கண்டதாக  கூறப்படுகிறது. கணவன்மார்கள் தங்களின் மனைவியரின்
நல்வாழ்விற்காக இங்கு வந்து வணங்கி செல்வதுண்டு.
 
 
  
    
 
இத்தலம் சனிபகவானுக்கென உள்ள ஒரே தலமாகும்.மற்ற கோள்களுக்கு சனி பகவான்
இடபெயர்ச்சி செய்யும்  தினத்தன்று  லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு
வருகைபுரிவார்கள்.நளமகராஜன் சனியின்  பார்வையால்  ஏற்பட்ட இடர்களை இங்கு
எழுந்தருளியுள்ள சனிபகவானை  வணங்கியபின் நீங்கப்பெற்றார்.பல்வேறு தீர்த்தக்குளங்களில்
நளதீர்த்தம் மிகவும் முக்கியமானதாகவும். இக்குளத்தில் குளிப்பதனால்ஒருவரது தீமைகள்
விலகிவிடும் என நம்பபடுகிறது.
 
 
  
    
 
நவக்கிரங்களில் ஒன்றான ராகுவிற்கான திருத்தலமாகும்.புராணங்களில் கூறப்பட்டுள்ள
ஆதிசேஷன்,தக்ஷன்,  கார்கோடகன்  எனும்   சர்ப்பங்கள்  சிவபெருமானை  இங்கு  வழிப்பட்டதாக
கூறப்படுகிறது. திருநள்ளாறு போன்றே இத்திருத்தலத்திலேயும் நளன் சிவனை வழிப்பட்டது
குறிப்பிடதக்கது.
 
 
  
   
 
இத்தலம் மிகவும் பழமை வாய்ந்த சிவதலமாகும்.நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவான்
சிவனை இங்கு வழிப்பட்டார்.கேது பகவானிற்காக வரு தனி மூலஸ்தானம் இக்கோவிலில்
உள்ளது.தேவர்கள் பாற்கடலை  கடைய  உதவியாக  இருந்த  வாசுகி  நாகத்திற்கு  ராகுவும்,
கேதுவும்  உதவியதாக
புராணங்கள் கூறுகின்றன.

விஷ்ணு தலங்கள் 108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்களின் பட்டியல்




திவ்யதேசங்களின் பட்டியல்

ஆந்திரப் பிரதேசம் & வட இந்தியா

1. திருப்பதி
2. அகோபிலம்
3. சாலிகிராமம்
4. நைமிசாரண்யம்
5. மதுரா
6. கோகுலம்
7. தேவ பிரயாகை
8. திருப்பிரிதி
9. பத்ரிநாத்

பஞ்சபூத தலங்கள்



பஞ்சபூத தலங்கள்:

இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனபது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான இடங்களில் சிவலிங்க வழிபாடு நடைபெருகின்றது.
இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில்

அருள்தரும் அறுபடை வீடுகள்



அருள்தரும் அறுபடை வீடுகள்

 தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமான் 
குன்றிருக்கும் இடமெல்லாம் வீற்றிருந்தாலும், 
அவரது படைவீடுகளாக
6 தலங்கள் சிறப்பித்து கூறப்படுகின்றன.

அந்த அறுபடை வீடுகளுக்கு நாம் ஒரு விசிட் அடிப்போமா...?

1.திருப்பரங்குன்றம் - முதல்படைவீடு





முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது.

லிங்க வடிவில் இருக்கும் இக்கோவில் அமைந்துள்ள மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் முக்கியமானவர்களான சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர்

இயேசுநாதரின் 12 சீடர்கள்!

இம்மானிட குலத்தின் மீட்பராக இவ்வுலகில் தோன்றியவர் இயேசுபிரான் என்பதை அறிவோம். இவரை பின்பற்றும் கோடிக்கணக்கானோர் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளனர். இயேசுநாதரின் தோற்றம், பின்னர் அவரது போதனைகளைப் பொறுக்காமல் அவர் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்தது குறித்தும் ஏற்கனவே அறிந்தோம்.

இந்த கட்டுரையில் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, அவரது போதனைகளைப் பின்பற்றிய 12 சீடர்கள் பற்றியும், அதன்பின் வந்த 2 சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

இஸ்ரேலின் பெத்லகேம் என்னும் ஊரில் சுமார் இரண்டாயிரத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் இவ்வுலகில் பிறந்தார். இவரின் தந்தை

கார்த்திகைத் தீபம் :

திருவண்ணாமலையே மகேசனாக் கோயில் கொண்டுள்ளது.பஞ்ச பூத்தலங்களும் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்றுகார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.தீபவழிபாடு பண்டைய காலந்தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது.சைவர், வைஷ்ணர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும்தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர்.இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு 'தீபாவளி' என்றும் , தெற்கே தீபவழிபாடு' கார்த்திகை தீபம் ' என்றும் கொண்டாடப்படுகிறது.தீபதானங்கள் பதினாறு

63 நாயன்மார்கள்

வைணவம் வளர்த்த பன்னிரு ஆழ்வார்கள்

1. பொய்கையாழ்வார் - ஸ்ரீ காஞ்சியதோக்தகாரி

2. பூதத்தாழ்வார் - திருக்கடல் மலை

3. பேயாழ்வார் - மயிலை பெருமாள்

4. திருமிழிசையாழ்வார் - திருமிழிசை

5. நம்மாழ்வார் - திருக்குருகூர்

6. மதுரகவியாழ்வார் - திருக்கோளூர்

7. குலசேகராழ்வார் - மலைநாடு (சேரநாடு)

8. பெரியாழ்வார் - ஸ்ரீவில்லிபுத்தூர்

9. தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமண்டங்குடி

10. திருப்பாணாழ்வார் - உறையூர் நாச்சியார்

11. திருமங்கையாழ்வார் - திருவாலி திருநகரி

12. ஆண்டாள் - ஸ்ரீவில்லிபுத்தூர்.


1.பொய்கையாழ்வார்

பிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,

பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு

நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)

கிழமை : செவ்வாய்

எழுதிய நூல் : முதல் திருவந்தாதி

பாடல்கள் : 100

சிறப்பு : திருமாலின் சங்கின் அம்சம்.
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று !

இவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார். வைணவத்தினர்

பஞ்சகவ்யம்


பாலில் எடுக்கப்படுகின்ற தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையன. குணமுடையன இவற்றின் கலவை சிறந்த சத்துணவு . கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணமுடையன.

பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் - 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கியபூசை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை

ஆடி மாதத்தின் சிறப்புகள் -என்னக்கு தெரிந்த விவரங்கள் உங்களுக்காக:-


இந்த மாதம் வரும் 17ஆம் தேதி புதன்கிழமை பிறக்க உள்ளதுஆடி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளனஅவற்றை இங்குதொகுத்துள்ளோம்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்று பல மொழிகள் உள்ளனஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழிஅதாவது செவ்வாய்க்கிழமைஎண்ணெய் தேய்த்து தலை குளித்துஅம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும்செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 
ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறதுஅதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனதுபயணத்தை துவக்குகிறதுஇந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும்இரவு நேரம் நீண்டும் காணப்படும்காற்றும்மழையும் அதிகமாக 

ஏழரைச் சனி என்ன செய்யும்?


காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது. 

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர். 
முதல் சுற்று: 
பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக்  காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது

Thursday, August 29, 2013

உலகம் முழுவதும் உள்ள இந்து கோவில்கள்

உலகம் முழுவதும் உள்ள இந்து கோவில்கள்


Lord Venkateshwara Temple, Birmingham, United Kingdom
      
          Malibu Hindu Temple, Malibu, California, US