Sunday, January 27, 2013


பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்கள்

1.எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், உடனடி சக்தி தரும் ஊட்ட உணவு ஆகும். தொடர்ந்து பேரீச்சம் பழம் உண்பவர்களுக்கு வயிறு, குடல் நோய்கள் குணமடையும். வயிற்றில் உள்ள தூண் கிருமிகள் வெளியேறும். அதிக நார்ச்சத்து கொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும்.


2.பெண்களுக்குத் தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும். பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

3.மலச்சிக்கல் நீங்கிட இரவு 5 பழங்களை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைத்து அதிகாலையில் அதனை மசித்து பழரசமாக பருகலாம். குழந்தைகளுக்கு பேதி நீங்கிட ஒரு பேரீச்சம்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனில் சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.

4.பேரீச்சம்பழங்கள் மிக அதிக சர்க்கரை கொண்டவை எனவே, அவற்றை சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு உடையவர்கள் உண்பதை அவசியம் தவிர்த்திட வேண்டும்.

5.ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம் பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

6.கண்பார்வை தெளிவடைய: வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.

7.மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

8.பெண்களுக்கு: பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.

9.மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

10.ஆண்களுக்கு: ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

11.சளி இருமலுக்கு: பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

12.நரம்பு தளர்ச்சி நீங்க: அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

13.பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்தி வந்தால் இதய
நோய்கள் அண்டாது.

No comments: