Sunday, January 27, 2013


Folder அல்லது file களை மற்றவர்கள் பயன்படுத்த முடியாதவாறு Encrpyt செய்ய

நமது அலுவலகம் அல்லது கல்லூரி போன்றவற்றில் ஒரே கணினியில் பல்வேறு யூசர் அக்கவுண்ட்களை கொடுத்துப் பயன்படுத்திக் கொண்டிருப்போம்.
இவ்வாறு உள்ள கணினியில் ஒரு யூசரின் அக்கவுண்டில் இருக்கும் கோப்புகள் அல்லது கோப்புறைகளை மற்றவர்கள் பார்க்க மட்டுமே முடியும். மற்றவர்கள் உங்கள் தனிப்பட்ட கோப்புகளை பயன்படுத்தாமலிருக்க  Encrpyt செய்யும் வசதி விண்டோசில் இருக்கிறது. . நமது சொந்த தகவல்கள் அடங்கிய கோப்புகளை இவ்வாறு Encrpyt செய்து வைப்பதன் மூலம் மற்றவர்கள் யாரும் அதைப் பயன்படுத்த முடியாதவாறு செய்யலாம்.


இதற்கு மைக்ரோசாப்ட் விண்டோசில் (Microsoft windows)வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. எந்த ஒரு மென்பொருளின் துணையில்லாமலேயே இதை நாம் எளிதாக செய்யமுடியும்.




  • முதலில் உங்களுடைய யூசர் அக்கவுண்டில் உள் நுழைந்துகொள்ளுங்கள்.(log in)
  • அடுத்து நீங்கள் Encrpyt செய்ய வேண்டிய கோப்பு அல்லது கோப்புறையை தேர்ந்தெடுத்து அதன் மீது ரைட் கிளிக் செய்யுங்கள். Properties என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • தோன்றும் விண்டோவில் Advanced என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது மற்றொரு விண்டோ திறக்கும் அதில், encrypt contents to secure data என்பதில் 'டிக்' செய்யவும்.
  • பிறகு APPLY கொடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்புறையானது ஒன்றுக்கும் மேற்பட்ட கோப்புகளைகள் மட்டும் கோப்புகளைக் கொண்டிருக்குமானால் apply changes to this folder,sub folders and files இவ்வாறான ஒரு விண்டோ தோன்றும். அதில் ok கொடுத்துவிடுங்கள்.
  • இனி நீங்கள் தேர்ந்தெடுத்த கோப்புகள் அல்லது கோப்புறைகள் Encrpyt ஆகிவிடும். Encripyt செய்யப்பட்ட கோப்புகள் அனைத்தும் பச்சை நிறத்தில் (Green)காணப்படும். இவ்வாறு Encrpyt செய்த கோப்புகளை உங்களைத் தவிர மற்றவர்கள் பயன்படுத்த முடியாது.

அப்படியே பயன்படுத்த நினைத்தாலும் இவ்வாறு பிழைச் செய்தி மட்டுமே தோன்றும்.


அதேபோல் இந்த வசதி உங்களுக்குத் தேவையில்லை என நீங்கள் நினைத்தால் மேற்சொன்ன வழிமுறையில் சென்று encrypt contents to secure data என்பதில் இருக்கும் 'டிக்' மார்க்கை எடுத்துவிட்டு APPLY செய்துவிடுங்கள். இப்போது உங்கள் கோப்புறை அல்லது கோப்புகள் decrypt ஆகிவிடும். நன்றி நண்பர்களே..!

No comments: