Wednesday, March 20, 2013

வனத்துறை பதவிகளுக்கு UPSC தேர்வு எழுதுபவர்களுக்கான வழிமுறைகள் !!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யு.பி.எஸ்.சி. எனப்படுகிறது. மத்திய அரசு துறைகளில் ஏற்படும் உயரதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களை இந்த அமைப்பு தேர்வு செய்து வருகிறது. எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தற்போது வனத்துறைக்கான ‘இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் எக்சாமினேசன் 2013’ தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ‘பிரிலிமினரி’ தேர்வு 26–5–13 அன்று நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 4–4–13 ஆகும்.



தேர்வின் பெயர் : இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் எக்ஸாமினேசன் 2013

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 1–8–13 தேதியில் 21 வயது பூர்த்தி அடைபவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2–8–1983 மற்றும் 1–8–1992 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் பின்வரும் பிரிவுகளில் குறைந்தபட்சம் இளங்கலை படிப்பு படித்திருக்க வேண்டும். அனிமல் ஹஸ்பண்டரி அன்ட் வெட்னரி சயின்ஸ், பாட்டனி, கெமிஸ்ட்ரி, ஜியாலஜி, மேத்தமேட்டிக்ஸ், பிசிக்ஸ், ஸ்டேட்டிஸ்டிக்ஸ் அன்ட் ஜூவாலஜி அல்லது அக்ரிகல்சர், பாரஸ்ட்ரி அல்லது என்ஜினீயரிங் பிரிவுகள் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கட்டணம் செலுத்துபவர்கள் ஸ்டேட் வங்கி அல்லது அதன் துணை வங்கிகளில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முன்னதாக குறிப்புகள் அனைத்தையும் முழுமையாக படித்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கு 3 வாரங்களுக்கு முன்பாக மின்னணு நுழைவு சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்படும். இதனை விண்ணப்பதாரர்களே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பப்படும். எனவே செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரி குறிப்பிட்டிருப்பதோடு, பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

கடைசி தேதி

தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 4–4–13

தேர்வு நடைபெறும் நாள் : 26–5–13

விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை அறியவும் www.upsc.gov.inwww.upsconline.nic.in ஆகிய இணைய தளங்களைப் பார்க்கவும்.

No comments: