Monday, May 6, 2013



எலுமிச்சம்பழத்தின் மருத்துவக்குணம்

குறைந்த விலையில் நிறைந்த பயன் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சம்பழம். வாகடத்தில் இதை அரச கனி என்று கூறுவார்கள்.

இதன் மருத்துவப்பலன்களைப் பெரிய பட்டியில் இட்டே கூறலாம். அவையாவன:




பித்தத்தைப்போக்கும். தலைவலியைத்தீர்க்கும், மலச்சிக்கலைப்போக்கும், தொண்டைவலியைப்போக்கும்,வாந்தியை நிறுத்தும், காலாராக்கிருமியை ஒழிக்கும்,பல் நோய்களைக்குணப்படுத்தும்,டான்சில் வராமல் தடுக்கும், விஷத்தைமுறிக்கும், தேள் கடிக்கு உதவும்,வாய்ப்புண்ணை ஆற்றும்,மஞ்சள் காமாலையை நீக்கும்,வீக்கத்தைக்குறைக்கும்,வாயுவை அகற்றும்,பசியை உண்டாக்கும், விரல் சுற்றுக்கு நிவாரணமாகும், யானைக்கால் வியாதியைக்குணப்படுத்தும். ஓட்டலில் அல்லது வெளிச்சாப்பாட்டுக் கடைகளில் சாப்பிடுபவர்கள் சுத்தம் அற்ற, நன்றாக வேகாத சமையலை உண்பதால் ஏற்படக்கூடிய வயிற்றுத் தொல்லையில் இருந்து விடுபட இரண்டு எலுமிச்சம்பழச்சாற்றுடன் நல்ல பெருங்காயத்தூள் கொஞ்சம், சிறிது உப்பு சேர்த்து தினம் குடித்து வருவது பெரும் நன்மையை அளிக்கும்.



அணுக்குண்டு சோதனைகள் நடத்துவதால் நீரிலும் காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத்தடுக்
கும் ஆற்றல் எலுமிச்சம்பழத்தொலில் உள்ள ப்யோபிளேன் என்ற சத்தில் இருக்கிறது. அதனால்
தினமும் எலுமிச்சம்பழம் சாப்பிடுபவர்கள் கதிரியக்கத்தைத்தாங்கிக்கொண்டு தப்பி உயிர் வாழ முடியும்.

புற்று நோயாளர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தீங்கை எலுமிச்சம்பழம் தடுகிறது.

விளையாட்டு, ஓட்டப்பந்தயம், கடுமையான வேலை,இவற்றால் ஏற்படும் களைப்பை நீக்க ஒரு எலுமிச்
சம்பழத்தை எடுத்து உடனடியாக கடித்துச்சாற்றையோ அல்லது பழத்தைபிளிந்து சாற்றுடன் சர்க்கரை சேர்த்துக்
குடித்ததும் களைப்பு நீங்கி தெம்பு ஏற்படும்.

உண்ணாவிரதம் இருப்பவர்கள் அவர்களின் உண்ணாவிரதத்தை முடிக்க எலுமிச்சம்பழச்சாறு கொடுப்பதை
நீங்கள் அறிவீர்கள். இதற்குரிய காரணம் உண்ணாவிரதத்தை விட்டு மறுபடி உண்ணு முன் எலுமிச்சம்
பழச்சாற்றை அருந்தி அதன் பின்பு உண்டால்தான் சீரணப்பிரச்சினைகள் தோன்றுவதைத்தடுக்கமுடியும்.


No comments: