ரயிலில் விற்கப்படும் உணவு சரியில்லையா? இது பற்றி, புகார் தெரிவிக்க 1800111321 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட தூர ரயில்களில் கேட்டரிங் சர்வீஸ் உள்ளது. இது பயணிகளுக்கு வசதியாக இருந்தாலும், ரயிலில் விற்கப்படும் உணவு நன்றாக இருப்பதில்லை என்றும், அளவு குறைவாக உள்ளது என்றும் அடிக்கடி புகார்கள் வருகின்றன.
இதையடுத்து, தரம் மற்றும் அளவு குறைபாடுகளை சரி செய்வதற்காக ரயில்வே நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்தார். இதன்படி, ரயிலில் விற்கப்படும் உணவு சரியில்லை என்றால், 1800111321 என்ற இலவச தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு புகார் கூறலாம். இந்த இலவச சேவை கடந்த 18ம் தேதியே அறிமுகப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலான மக்களுக்கு இன்னும் இது பற்றிய விவரம் தெரியவில்லை.
இதனால், நேற்று முன் தினம் வரை 26 புகார்களே பதிவாகியுள்ளன. எனவே, இந்த இலவச தொலைபேசி விவரம் குறித்து பயணிகளுக்கு விளம்பரப்படுத்தப்படும் என்று பன்சால் தெரிவித்தார். இலவச தொலைபேசியில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை புகார் தெரிவிக்கலாம். உணவில் அளவு குறைந்தாலோ, தரம் இல்லாவிட்டாலோ, அதிக விலைக்கு விற்கப்பட்டாலோ புகார் கூறலாம். புகாரை ரயில்வே நிர்வாகம் பதிவு செய்து, அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கும்.
No comments:
Post a Comment