கர்ப்பமாக இருக்கும் போது குழந்தை ஆரோக்கியமாக இருக்க நிறைய உணவுகளை உண்பார்கள். ஆனால் பிரசவத்திற்குப் பின்னர் , சில நாட்கள் கழித்து அவற்றால் உடல் எடை அதிகரித்துவிடுகிறது. ஏனெனில் குழந்தை பிறந்த பின்னர், உடலில் கர்ப்பத்தின் போது சாப்பிட்ட உணவுகள் அனைத்தும் அதன் வேலைகளை காண்பிக்கும். அதனால் உடல் எடை அதிகரித்து, ஒரு வித அழகான வடிவம் இல்லாமல் போய்விடும். மேலும் இத்தகைய பிரச்சனை வராமல், உடல் எடையை அழகாக வைக்க ஒரு சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.
மேலும் பிரசவம் ஆன 3 மாதத்திற்குப் பின், ஈஸியாக ஒரு சிலவற்றை செய்தால் 6-8 மாதத்திற்குள் அழகாக மாறிவிட முடியும். அதிலும் பிரசவத்திற்குப் பின் உடல் எடையை குறைக்கும் போது, வாரத்திற்கு ஒரு கிலோ குறைத்தால் போதுமானது. பிரசவம் சாதாரணமாக இருந்தால், இரண்டு வாரங்களில் உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆனால் அதுவே சிசேரியன் என்றால் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று, அதன் பின்பே உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும். அவ்வாறு உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது என்னென்ன பாயிண்ட்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
* பிட்னஸ் சென்டர் போகும் முன் மருத்துவரிடம் மறக்காமல் சோதித்தப் பின்னர் தான் போக வேண்டும்.
* தினமும் 10-12 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.
* நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களான பாப் கார்ன், கோதுமையால் ஆன நொறுக்கு தீனிகள், உலர்ந்த திராட்சைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை மட்டும் சாப்பிட வேண்டும்.
* இறைச்சி சாப்பிடும் போது எலும்பில்லாத சிக்கன் மற்றும் மாட்டிறைச்சியை சாப்பிடலாம்.
* வெள்ளை உணவுப் பொருட்களான வெள்ளை சாதம், வெள்ளை பிரட் போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்து, நவ தானியங்களால் ஆன பிரட், பாஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.
* கடைகளில் கொழுப்பில்லாத உணவுகள் என்று லேபிள் ஒட்டியிருந்தால், அதனை வாங்கி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது என்று நினைக்க வேண்டாம். அதில் தான் நிறைய கலோரிகள் மற்றும் எண்ணெய்கள் அல்லது அதிகமான ஃப்ருக்டோஸ் கார்ன் சிரப் இருக்கும். ஆகவே அதனை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
* ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* உடல் நிலை ஓரளவு சரியானது போல் இருந்தால், லேசான உடற்பயிற்சியை செய்ய தொடங்கலாம். அதிலும் தினமும் ஒரு 10 நிமிடம் குழந்தையுடன் வாக்கிங் செல்லலாம். பின் போக போக 20 நிமிடம் என்று அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.
* எளிதாக உடல் எடையை குறைக்க ஒரு வழி என்னவென்றால், அது வீட்டு மாடிப்படியை ஏறுவது தான். ஆகவே அவ்வப்போது மாடிப்படியை ஏறி இறங்குங்கள்.
* தாய்ப்பால் குழந்தைக்கு கொடுப்பதால், உடலில் இருந்து ஒரு நாளைக்கு 500 கலோரிகள் கரைகின்றன. ஆகவே எவ்வளவு தாய்ப்பால் குழந்தைக்கு கொடுக்கின்றோமோ, அவ்வளவு கலோரிகள் உடலில் இருந்து கரையும்.
ஆகவே மேற்கூறியவற்றையெல்லாம் நினைவில் கொண்டு நடந்தால், ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் குறைந்து, அழகாக இருக்கலாம்.
No comments:
Post a Comment