Saturday, November 16, 2013

வாழைக்காய் பொடிமாஸ்

வாழைக்காய்மிளகாய்உளுத்தம் பருப்பு
தேவையான பொருட்கள்:
  1. வாழைக்காய் – 4
  2. உளுத்தம் பருப்பு- 25 கிராம்
  3. மிளகாய் – 8
  4. நெய் – 100 கிராம்
  5. பெருங்காயம் – சிறிதளவு
  6. கடலைப் பருப்பு – 50 கிராம்
  7. துருவிய தேங்காய் – 150 கிராம்
  8. வேகவைத்த துவரம் பருப்பு – சிறிதளவு
  9. உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
  • வாழைக்காய்களை கழுவி துடைத்து விட்டு எண்ணெய் தடவி நெருப்பில் போட்டு நன்றாக சுட்டு எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • வாணலியில் நெய்யை விட்டு மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • பின்னர் வாழைக்காயின் தோலை நீக்கி விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்து  அதனுடன் உப்பை சோக்கவேண்டும்.
  • வறுத்து அரைத்த பொடியை பிசைந்து வைத்துள்ள வாழைக்காயுடன் சேர்க்கவேண்டும். பின்னர் துருவிய தேங்காய் துருவலையும், வேகவைத்த துவரம் பருப்பையையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவேண்டும். இப்பொழுது சுவையான வாழைக்காய் பொடி மாஸ் தயார். இதை சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
மருத்துவக் குணங்கள்:
  • 100 கிராம் வாழைக்காயில் இரும்புச் சத்து 6.3 மி. கிராம், போலிக் அமிலம் 16.0 மி.கிராம் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய சத்துக்கள் காணப்படுகிறது.
  • போலிக் அமிலப் பற்றாக்குறையால் கருவுற்ற தாய்க்கும், குழந்தைக்கும் உண்டாகும் இரத்த சோகையை போக்க வாழைக்காய் மருந்தாக பயன்படுகிறது.
  • உளுந்தை தோலுடன் கஞ்சி அல்லது களி செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு எலும்பு வலிமை பெறும். இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்.
  • உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துவர இடுப்பு வலி நீங்கும். காச நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.
  • உளுந்தை‌க் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.
  • உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
  • உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.

No comments: