Wednesday, November 20, 2013

திருப்பூர் மாவட்டம்


altதிருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகேயுள்ள அமராவதி, திருமூர்த்தி அணைகள், சின்னாறு என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் கோடை சுற்றுலாவுக்கு ஏற்றவை.

திருமூர்த்தி மலை
உடுமலையில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. திருமூர்த்தி மலையடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோயிலும், அணையும் இருக்கிறது. அணையில் படகு சவாரி செய்யலாம். அணையின் கரையில் வண்ண மீன் காட்சியகம் உள்ளது. அரிய வகை
மீன்கள் உள்ளன. அடுத்து நீச்சல் குளம் உள்ளது. மிகப்பெரிய சிவன் சிலையில் இருக்கும் ஐந்து தலை நாகத்தின் வாயிலிருந்து குளத்தில் தண்ணீர் கொட்டுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் இருந்து மலையில் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று பஞ்சலிங்க அருவியில் குளிக்கலாம்.

அமராவதி அணை
திருமூர்த்தி மலையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. அணையில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நீர் மட்டம் குறைவாக இருக்கும். படகு சவாரி இருக்காது. பிரெஷ் மீன் உணவு இங்கு சிறப்பு. இங்கிருந்து அரை கி.மீ. தூரத்தில் முதலை பண்ணை இருக்கிறது.

சின்னாறு
அமராவதியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கேரள எல்லையில் சின்னாறு உள்ளது. அமராவதி அணைக்கு நீர் கொண்டு வரும் ஆறு. இங்கு வனத்துறை ஏற்பாட்டில் டிரெக்கிங் செல்லலாம். 5 பேர் குழுவுக்கு கட்டணம் ரூ.500.  வனத்துறை விடுதிகள் உள்ளன.
உடுமலையில் இருந்து 85 கி.மீ. தொலைவில் மூணார், 35 கி.மீ. தொலைவில் பழனி, 95 கி.மீ. தூரத்தில் கொடைக்கானல் உள்ளது.

தங்கும் வசதி
திருமூர்த்தி மலை நீச்சல் குளத்தில் மூன்று சூட்கள் கொண்ட தங்கும் விடுதி உள்ளது. ஒருநாள் தங்க ஒரு சூட்டுக்கு கட்டணம் ரூ.300. தனியார் விடுதிகளும் உள்ளன. 3 பேர் தங்கும் அறைக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை வாடகை. அமராவதியில் தங்கும் வசதி இல்லை. சின்னாறு விடுதியில் தங்க ஒரு அறைக்கு கட்டணம் ரூ.500. நாமே சமைத்துக் கொள்ள வேண்டும். உடுமலையில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். போன்: 04252- 231555.

பஸ் வசதி
சென்னையில் இருந்து ரயிலில் கோவை வந்து, பஸ்சில் உடுமலை செல்லலாம் அல்லது பஸ்களில் உடுமலைக்கு வரலாம். தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் பழநி வழியாக பஸ்சில் வரலாம். வாடகை காரில் மூன்று இடங்களையும் சுற்றி பார்க்க ரூ.3 ஆயிரம் வாங்குகிறார்கள்.

No comments: