தேவையான பொருள்கள்:
- சுரைக்காய் = அரை கிலோ
- துவரம் பருப்பு = 100 கிராம்
- பெருங்காயம் = சிறிது
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
- சீரகம் = அரை ஸ்பூன்
- கடுகு = அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் = 2
- எண்ணெய் = 2 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- சுரைக்காய் தோல் சீவிக் கொள்ளவும். பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து குழைய வேக விடவும். பச்சை மிளகாயை நீளவாட்டில் கீறிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். கடைசியாக பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.
- சிறிது வதக்கியதும் சீரகம், மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும். மேலும் சிறிது வதங்கியதும் உப்பு சேர்த்து சிறிதளவு நீரை தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
- 10 நிமிடம் கழித்து தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி சேர்த்து பரிமாறாவும்.
சுவையான சுரைக்காய் கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.
No comments:
Post a Comment