தேவையான பொருள்கள்:
- வெண்டைக்காய் = சிறிதளவு
- துவரம் பருப்பு = 200 கிராம்
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- பெருங்காயம் = சிறிதளவு
- வெங்காயம் = 1
- மிளகாய் பொடி = 1 1/2 ஸ்பூன்
- புளி = எலுமிச்சை அளவு
- கடுகு = அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
- எண்ணெய் = 2 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- துவரம் பருப்பை மஞ்சள் பொடி, பெருங்காயம் சேத்துக் குழைய வேக விட்டுக் கொள்ளவும். வெங்காயம் நறுக்கவும். வெண்டைக்காயை காம்பையும், நுனியையும் நறுக்கி எடுத்து விட்டு ஓரங்குல துண்டுகளாக நறுக்கவும். புளியை கரைத்து வடிகட்டவும்.
- வெறும் வாணலியில் வெண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். சற்று கருகும் படி வதக்க வேண்டாம். மிதமான தீ இருக்க வேண்டும். இதை தனியாக எடுத்து விட்டு புளிக்கரைசலில் வெங்காயம், உப்பு, மிளகாய் பொடி சேர்த்து மூடி கொதிக்க விடவும்.
- நன்றாக கொதித்துப் பொடி வாசனை அடங்கியதும் வதக்கிய வெண்டைக்காய், பருப்பு சேர்த்து மூடி மீண்டும் கொதிக்க விட்டு 2 நிமிடம் கழித்து எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி சேர்க்கவும்.
- அப்படி செய்தால் வெண்டைக்காய் உடையாமலும், குழகுழப்பாக இல்லாமலும் இருக்கும்.
சுவையான வெண்டைக்காய் சாம்பார் தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, பொங்கல் போன்றவற்றோடு பரிமாறலாம்.
No comments:
Post a Comment