பஞ்சபூத தலங்கள்:
இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனபது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான இடங்களில் சிவலிங்க வழிபாடு நடைபெருகின்றது.
இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூத தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பஞ்ச பூதங்கள்:
பஞ்ச என்றால் ஐந்து ( 5 ) என்று பொருள்படும். பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும் பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையாக மதித்தனர் நம் முன்னோர்கள்.
ஆகவே முத்தொழில் முதல்வனான சிவனுடைய தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்டனர். உலகம் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்த பஞ்ச பூதங்களின், தமிழ் மற்றும் வடமொழி பெயர்களை கீழே காணலாம்.
சிவபெருமானுக்குரிய பஞ்சபூத தலங்கள் வருமாறு,
1.நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்
2.நீர் - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
4.ஆகாயம் - சிதம்பரம் நடராஜர் கோவில்
5.நெருப்பு - திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்ஐந்து முக விளக்கும், தீபாராதனைகளும்
உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி, காற்று, நீர்:, நெருப்பு.
உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முக விளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது.
No comments:
Post a Comment