Sunday, November 17, 2013

ஆடி மாதத்தின் சிறப்புகள் -என்னக்கு தெரிந்த விவரங்கள் உங்களுக்காக:-


இந்த மாதம் வரும் 17ஆம் தேதி புதன்கிழமை பிறக்க உள்ளதுஆடி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளனஅவற்றை இங்குதொகுத்துள்ளோம்.
ஆடிப்பட்டம் தேடி விதை என்று பல மொழிகள் உள்ளனஆடி செவ்வாய் தேடிக் குளி என்பது பழமொழிஅதாவது செவ்வாய்க்கிழமைஎண்ணெய் தேய்த்து தலை குளித்துஅம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும்செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 
ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் ஆரம்பிக்கிறதுஅதாவது சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தனதுபயணத்தை துவக்குகிறதுஇந்த காலக்கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும்இரவு நேரம் நீண்டும் காணப்படும்காற்றும்மழையும் அதிகமாக 

இருக்கும்.
தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கு கின்ற மாதம் ஆடி மாதம்அம்மனுக்கு உரிய மாதமாக இது போற்றப்படுகிறதுபூமிதேவி பூமியில்அம்மனாக அவதரித்த மாதம்பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன்ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம்கொடுத்தார்சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும்ஆடி மாதத்தில் மட்டும் சிவன்சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம்இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய்ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர்தை முதல் ஆனி வரை உத்தராயனம்இதுவே தேவர்களின் பகல் காலமாகும்ஆடிமுதல் மார்கழி வரை தட்சிணாயனம்இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும்நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின்ஒரு நாள்தான்ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.
மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல்நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகை களைக்கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர்வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்த மானவைகூழும்விருப்பமானதேஇவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற் கும் உதவுபவைஇவற்றையே இம்மாதத் தில் அம்மனுக்குப்படைத்து பக்தர் களுக்குத் தருகிறார்கள்.
ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்புஆடி அஷ்டமிஆடிச் செவ்வாய்ஆடி வெள்ளிஆடிக் கிருத்திகை,ஆடி அமாவாசைஆடிப் பௌர்ணமிஆடித் தபசுஆடிப் பெருக்குஆடிப் பூரம்ஆடிப் பண்டிகை களாகும்.
லலிதா சகஸ்ரநாமம்அம்மன் பாடல்களைப் பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிட்டும்அன்று வயதுக்கு வராத பெண் குழந்தைக்குரவிக்கைதாம்பூலம்சீப்புசிமிழ்கண்ணாடி வளையல் தந்து சிறப்பிக்க வேண்டும்அவர்களை அம்மனாகப் பாவித்து அமுதளிக்கவேண்டும்.
ஆடி வெள்ளியில்தான் வரலட்சுமி விரதம் வரும்சில வருடங்களில் இது ஆவணியிலும் அமைந்துவிடும்இவ்வாண்டு ஆவணிமுதல் வெள்ளியில் வரலட்சுமி விரதம் வருகிறதுபொதுவாக ஆடி வெள்ளிகளில் மாலை ஆலயங்களில் குத்து விளக்குப் பூஜைநடைபெறும். 108, 1008 விளக்குகள் வைத்துப் பூஜை செய்வார்கள்.
சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் 
ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்து கின்றனர்இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளதுஆடிவெள்ளியன்றுஇவ்வம்மன் மாணவியாக இருக்கஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்குவந்து வேண்டிக் கொள்கின்றனர்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிகச் சிறப்பாகும்வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் குழுக்களாக 108, 1008 குத்துவிளக்குப் பூஜைகளைச் செய்யலாம்அம்மன் பூஜை செய்யும் இல்லத்தில்செல்வம் சேரும்திருவானைக்காவலில் ஆடி வெள்ளி யன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவி யாகவும்உச்சிக்கால வேளையில்பார்வதி யாகவும்மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.
ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம்துளசி மாடம்முன் கோலமிட்டுமாடத்திற்குப்பொட்டிட்டுதுளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும்குளித்தபின்தான் துளசிக்கு நீரூற்ற வேண்டும்.
ஆடிப் பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டதுஇவர் கல்விக்குரிய கடவுள்இவர் வழிபாடு தொன்மையானது.திருமால் உடலிலிருந்து மதுகைடபர் என்பவர் வியர்வையில் தோன்றினர்.
இந்த அசுரர்கள் பிரம்மனிடமிருந்து வேதங்களை அபகரித்து குதிரை முகத் துடன் பாதாளத்தில் ஒளித்து வைத்தனர்வேதங்களைஇழந்த பிரம்மா திருமாலிடம் முறையிடதிருமால் குதிரை முகம் கொண்டு அவர்களிடம் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம்தந்தார்.
போரிட்டதால் பரிமுகக் கடவுளின் உக்ரம் தணியவில்லைஅதனால் திருமகள் மடியில் அமரஅவர் உக்ரம் தணிந்து லட்சுமிஹயக்ரீவரானார்.
ஆடி மாதத்தில் என்னதான் சிறப்புகள் என்று நாம் கூறினாலும்புதுமணத் தம்பதிகளுக்கு ஆடி மாதம் ஒரு கஷ்ட காலமாகவேஇருக்கும்.
அதாவதுஆடி மாதத்தில் தம்பதியர் ஒன்று சேர்ந்து குழந்ததை உண்டானால் சித்திரையில் குழந்தை பிறக்கும்அந்த சமயத்தில்கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால்தான் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பார்கள்.
எல்லாம் நன்மைக்கே என்று தம்பதிகள் பெருமூச்சு விடுவதும் இந்த ஆடி மாதம்தான்.

No comments: