Monday, December 30, 2013

முதுகு தண்டிற்கு வலிமை தரும் பயிற்சி

முதுகு தண்டிற்கு வலிமை தரும் பயிற்சிஉடலுக்கு வலிமை தரும் பயிற்சிகளில் மிகவும் எளிமையானதும் விரைவில் பலன் தரக்கூடியதுமான பயிற்சி இது. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 20 நிமிடம் செய்து வந்தால் போதுமானது. முதுகு வலி பிரச்சனை இருப்பவர்கள் இந்த பயிற்சியை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி கால்களுக்கு நல்ல வலிமை தரும். 

இந்த பயிற்சி செய்யும் முறை: 

முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக்கொள்ளவும். கைகளை மடக்கி தலையின் அடியில் வைக்கவும். கால்களை 90 டிகிரியில் மேலே தூக்கவும். இப்போது சற்று முன்னால் எழுந்து படத்தில் உள்ளபடி வலது கையால் இடது காலை
தொட வேண்டும். 

அப்போது இடது கை தலையில் இருக்க வேண்டும். பின்னர் கைகளை மாற்றி இடது கையால் செய்ய வேண்டும். இவ்வாறு கைகளை மாற்றி மாற்றி செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்வது மிகவும் கடினமாக இருக்கும். நன்கு பழகிய பின்னர் இந்த பயிற்சி எளிதாக செய்ய வரும். 

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 20 முறை செய்தால் போதுமானது.பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின்  அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம். ஆண்கள் அதற்கு மேலும் செய்யலாம். 

சிசேரியன் செய்த பெண்களுக்கு முதுகு வலி பிரச்சனை இருக்கும். அவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் முதுகு வலி படிப்படியாக குறைந்திருப்பதை காண்லாம்.

No comments: