உடல் முழுவதிற்கும் வலிமை தரும் பயிற்சிகள் பல உள்ளன. ஆனால் அந்த வகை பயிற்சிகளை செய்ய ஜிம்முக்கு தான் செல்ல வேண்டும். அவ்வாறு ஜிம்முக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய கூடிய பயிற்சி ஒன்று உள்ளது.
இந்த பயிற்சியை தினமும் 10 நிமிடம் செய்தால் போதுமானது. உடலுக்கு வலிமையும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். புதிதாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த பயிற்சி ஆரம்பத்தில் சற்று கடினமாக
இருக்கும். ஆனால் இந்த பயிற்சி செய்ய பின்னர் நல்ல பலனை தருவதை காணலாம்.
இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி கும்புற படுத்துக் கொள்ளவும். பின்னர் கால் பாத முன்பகுதியை தரையில் ஊன்றவும். இப்போது கைகளை முட்டி வரை மடக்கி உடலை மேல் நோக்கி தூக்கவும்(படத்தில் உள்ளபடி).
பின்னர் மெதுவாக வலது கையை மட்டும் தரையில் இருந்து எடுத்து மேல் நோக்கி தூக்கவும். இப்போது உங்கள் உடல் முழு எடையை கால் பாதங்கள், இடது கை தாங்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் கைகளை மாற்றி இடது பக்கம் செய்யவும்.
இவ்வாறு கைகளை மாற்றி 10 நிமிடம் செய்ய வேண்டும். சில நிமிடங்கள் ஓய்வு எடுத்த பின்னர் திரும்பவும் இந்த பயிற்சியை செய்யலாம். இந்த உடல் முழுவதிற்கும் நல்ல வலிமையை தரக்கூடிய பயிற்சியாகும்.

No comments:
Post a Comment