Monday, December 30, 2013

பின்புறத்தை அழகாக்கும் பிலேட்ஸ் பயிற்சி

பின்புறத்தை அழகாக்கும் பிலேட்ஸ் பயிற்சிஇந்த பயிற்சி குறிப்பாக பெண்களுக்கானது.. பின்புறம் அழகாக தெரிய வேண்டுமா? கவலை வேண்டாம். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ளவும். 

கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். கால் பாத விரல்கள் தரையை தொட்டபடி இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக தலையை தூக்கி மார்பு வரை தோள்பட்டையை உயர்த்தி கைகளை
தோள்பட்டைக்கு நிகராக(படத்தில் உள்ளபடி) நீட்டவும். 

இந்த நிலையில் சில விநாடிகள் இருக்கவும். இது ஒரு செட். இந்த செட்டிலிருந்து மெதுவாக கைகளை முதுகுக்கு பின்புறமாக (படத்தில் உள்ளபடி) உடலோடு ஒட்டியபடி நீட்டவும். அப்போது தலையை இன்னும் சற்று மேலே தூக்க வேண்டும். கால்களை தூக்க கூடாது. 

இது இரண்டாவது செட். இந்தநிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் மெதுவாக பழைய நிலைக்கு வரவும். செட் ஒன்றில் ஆரம்பித்து பின் மெதுவாக செட் 2-க்கு வந்து முடிக்க வேண்டும். இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 20 முதல் 25 முறை செய்ய வேண்டும். 

ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்ய சற்று கடினமாக இருக்கும். ஆனால் இந்த விரைவில் நல்ல பலன் தரக்கூடிய பயிற்சி இது.

No comments: