Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Sunday, January 27, 2013


நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள் !!!


ஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகக்ள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது.

குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும். தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது.


அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 


நரம்பு தளர்ச்சியை முற்றிலும் போக்கும் மீன் வகைகள் !!!


ஆரோக்கிய உணவு வகையில் இடம்பெறும் முக்கிய உணவுப் பொருள் மீன். அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்புச் சத்துகக்ள் மனிதனுக்கு பலவகைகளில் நன்மை தரக்கூடியது.

குறிப்பாக சிறந்த கண் பார்வைக்கும், சருமத்தின் பொலிவுக்கும் மீன் உணவு உதவும். தற்போது கூடுதலாக நரம்பு மண்டலத்தின் உறுதிக்கும் மீன் அத்தியாவசியமானது என்று தெரியவந்துள்ளது.


அனைத்து வகை மீன்களிலும் ஒமேகா-3 


கொழுப்பை குறைத்து உடம்பை “சிக்” கென்று வைத்திருக்க  உதவும் உண‌வுகள்!
கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை.

பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்கள்

1.எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், உடனடி சக்தி தரும் ஊட்ட உணவு ஆகும். தொடர்ந்து பேரீச்சம் பழம் உண்பவர்களுக்கு வயிறு, குடல் நோய்கள் குணமடையும். வயிற்றில் உள்ள தூண் கிருமிகள் வெளியேறும். அதிக நார்ச்சத்து கொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும்.

இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க சில டிப்ஸ்!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.

இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.


உயிருக்கு ஆபத்தான உணவு வகைகளை தவர்ப்பது நல்லது !!

வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்? எப்படி சாப்பிடுகிறோம்? என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர். இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ்,       பீட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பன் -டை- ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.

சகலவித நோய்களையும் விரட்ட இயற்கை மருத்துவம்!

உணவானது வயிற்றை நிறைப்பதற்கு மட்டும் தான் என்பதில்லை. இந்த உணவு தான் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கிறது. இந்த சக்தியைக் கொடுக்கும் உணவுகள், உடலுக்கு பலத்தை கொடுப்பதோடு, உடலை பல நோய்களை தாக்காமலும் பாதுக்காக்கிறது. உணவுகள் என்றால் அனைவரும் பிடித்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவார்கள். சில உணவுகளில் ருசி இல்லாவிட்டாலும், அவற்றில் தான் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. சிலர் சாதாரணமாக சிறிதாக உடல் நிலை சரியில்லையென்றாலும், மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் மருந்துகளை பெற்று, அதனை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வாறு கடைகளில் சென்று பணத்தை செலவழித்து வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, நம் முன்னோர்கள் பின்பற்றி சாப்பிட்டு வந்த உணவுகளை சாப்பிட்டாலே ஒரு சில சிறிய நோயை கூட சரிசெய்யலாம். சரி இப்போது எந்த உணவுகளை சாப்பிட்டால், என்ன நோய் அல்லது பிரச்சனை சரியாகும் என்பதைப் பார்ப்போமா!!

கேரட்டின் மகத்துவம்

கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது !!!

கண்பார்வை பிரச்சனைகளும் வராது !!!

கேரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கேரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள்.

கண்களை பாதிக்கும் காரணிகளும் அதற்கான சில விளக்கமும் !!!

1) கண்களை பாதிக்கும் சில காரணிகள்:

க்ளைகோமா, தூரப்பார்வை,கிட்டப்பார்வை ,ஸ்டை (ஸ்டை என்பது கண்ணீர் சுரப்பியை தடுக்கும் கண்ணின் மேற்புறத்தில் தோன்றும் ஒரு தொற்று ஆகும்) கட்டிகள், தொற்றுகள் கண்புரை உலர்ந்த கண்

2) கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?

முருங்கை கீரையின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய...

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.

எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா !!!

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!


எலும்பு வலிமைக்கு என்ன செய்யலாம் !!

நமது உணவுப் பழக்கவழக்கம் தான் நம் உடம்பில் உள்ள எலும்புகள் உறுதியாவதற்கும், உடைவதற்கும் காரணமாகிறது. சரியான ஊட்ட உணவு எலும்புகளுக்கு கிடைக்காவிட்டால் அதுவே எலும்புகள் வலுவிழந்துபோகக் காரணமாகி விடுகிறது.

உணவு உட்கொள்ளாமல் புறக்கணித்தல், குறைந்த கலோரி உள்ள உணவுகளை உட்கொள்ளுதல், கால்சியம்அதிகம் உள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை விலக்குதல், அதிக கலோரி உள்ள உணவுகளைஉட்கொண்டு ஊட்டச்சத்து உணவுகளை தவிர்த்தல் ஆகிய காரணங்கள் நாளடைவில் எலும்புகளுக்கு கேடுவிளைவிக்கும் வேலையை செம்மையாக செய்துவிடுகின்றன.


குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் !

குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் நல்ல சத்துள்ள உணவுகளைக் கொடுத்து வளர்க்க வேண்டும். உணவில் பொதுவாக புரதம், கொழுப்பு, மாவுப் பொருள் வைட்டமின்கள், தாது உப்புக்கள் என்னும் ஐந்து வகையான முக்கிய உணவுச் சத்துகள் அடங்கியுள்ளன.

முட்டைக்கோசின் மருத்துவ குணம்..!

சித்தர்களும், ஞானிகளும் அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண்டங்கத்திரி மருத்துவப் பயன்கள் !

மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவைதான் கற்ப மூலிகைகள். கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது. இதில் மூலிகைகள் பல உள்ளன.ஒவ்வொரு மூலிகைகளுக்கும்அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம். கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது.

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு -- மருத்துவ டிப்ஸ் !!!

இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு, மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு தவிர்க்க முடியாதது. பூண்டின் மகத்துவத்தைப் பற்றியும், நோய்களைக் குணப்படுத்த அதைப் பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விவரிக்கிறார் காரைக்குடி

முகத்திற்கு ஆவி புடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...!!!

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.


தொப்பையை குறைக்க சில முக்கிய குறிப்புகள் !!!

பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.

உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது. ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் ஒர...
சில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம்.


சிறுநீரகக் கல் நோயாளிகளுக்கான உணவுகள்:

சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவான உணவு முறைகள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டிய உணவுகள் :

இளநீர்

இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்க வல்லவை.

தொண்டை புண்ணுக்கு நிவாரணம் தரும் உணவுகள்..!!


குளிர்காலம் என்றாலே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அப்போது உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய பிரச்சனைகளில் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவையே முதன்மையானவை. ஏனென்றால் அப்போது அதிக குளிர்ச்சி காரணமாக, உடலில் உள்ள வெப்பமானது வெளியேறும். எனவே இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் இந்த காலத்தில் சாப்பிடும் உணவுகளிலும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிக குளிர்ச்சியான உணவுகள் இந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, தொண்டையில் கரகரப்பு ஏற்பட்டு, இறுதியில் புண்ணை ஏற்படுத்திவிடும்.