Sunday, January 27, 2013


இணையம் மூலம் டி.வி பார்க்கலாம் வாங்க...!

(Google TV Add-on)

வணக்கம் நண்பர்களே..!

watch online tv (3000 channels)
புதிய தொழில்நுட்ப உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் இனி எந்த வேலையும் நடக்காது என்ற நிலை.

கணினியோடு கணினியாக நம் மனித இனம் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளிலும் பெரும்பாலான பகுதியை கணினியுடனே நாம் செலவிடுகிறோம்.


இவ்வாறு கணினியுடன் பணிபுரியும் நேரங்களில், சோர்வாக இருக்கும் நேரங்களில் நமக்கு விருப்பமான தொலைக்காட்சிகளையும் நாம் பார்க்க முடியும்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் டி.வி பார்ப்பது என்பது முடியாத செயலாக இருந்து வந்தது.. தற்போது அது சாத்தியமாகியிருக்கிறது.

உங்களுக்குப் பிடித்த அனைத்து தொலைக்காட்சிகளையும் இணையத்தின் மூலமே இனி கண்டுகளிக்கலாம்.

இந்த வசதியை நமக்கு ஏற்படுத்தி தந்திருப்பது.. உலக தேடுபொறி தளங்களிலேயே முதன்மையான நிறுவனமான கூகிள்தான்..

கூகிள் பல்வேறு நாட்டு தொலைக்காட்சிகளை இணையத்தில் பார்க்கும் வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. உலகநாடுகளின் 3000 க்கும் மேற்பட்ட டி.வி சேனல்களைதற்போது நாம் இணையத்தில் வழியே பார்க்க முடியும்.

இணையத்தில் டி.வி பார்க்க செய்ய வேண்டியது:
Google Chrome பயனர்களுக்கு: 
1. உங்கள் கணினியில் கூகிள் குரோம் உலவி  நிறுவி இருக்க வேண்டும்.
2. கூகிள் உலவியைத் திறந்துகொள்ளுங்கள்.
3. கீழிருக்கும் இணைப்பை கிளிக் செய்யுங்கள்.
See all TV Channels all around world
திறக்கும் பக்கத்தில்  ADD TO CHROME என்னும் பட்டனை கிளிக் செய்து Install கொடுத்து Add-On உலவியில் இணைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பப்பட்ட நாடுகளில் உள்ள 3000க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளைக் கண்டுகளியுங்கள்.

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள கீழிலுள்ள வீடியோவை இயக்கி தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த Add-on -ஐ குரோம் உலவியில் எப்படி பயன்படுத்துவது என்பதை இந்த வீடியோவில் தெளிவாக காட்டியிருக்கிறார்கள். 




FireFox பயனர்களுக்கு: 

நீங்கள் பயர்பாக்ஸ் உலவி பயனர்கள் எனில் உங்களுக்கென இந்த Plugin உள்ளது.

உங்கள் பயர்பாக்ஸ் உலவியில் கீழிருக்கும் இணைப்பின் வழி சென்று Fire fox TV Plugin டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
Download Firefox TV Plugin
இந்த பிளகின் மூலம் நீங்கள் உலகிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளைக் கண்டுகளிக்க முடியும்.

ஆங்கிலச் சுருக்கம்:
TV Add-on for Google Chrome -   Watch TV directly from your Chrome Browser,  it’s Easy & Free!
2780 Live TV Channels sorted by country & category,  the TV-CHROME allow you to watch thousands of  TV channels freely available on the internet. powered by the biggest and most up to date database.
நன்றி நண்பர்களே..!
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்.

No comments: