Sunday, January 27, 2013


Browser short cuts- உலவிகளில் குறுக்குவிசைகள்

குறுக்கு விசைகள் என்பது கணினியில் ஒரு பணியை விரைவாகச் செய்யப் பயன்படும் எளிய முறையாகும். கணினியின் விசைப்பலகையில்(Keyboard) இரண்டு அல்லது மூன்று விசைகளை ஒன்றாகப் பயன்படுத்தும்போது நாம் மேற்கொள்ள இருக்கும் பணிகளை உடனடியாக எளிதாகச் செய்ய முடியும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் Google Chrome, Firefox, Internet Explorer ஆகியவற்றில் கீழ்க்கண்ட
குறுக்கு விசைகளைப் பயன்படுத்தும் மூலம் நாம் மேற்கொள்ளும் பணிகளை விரைவாக, எளிதாக செய்ய முடியும். இவற்றை ஆங்கிலத்தில் keyboard shortcuts என்கிறோம்.


வலைஉலவியில் பயன்படுத்தக்கூடிய shortcut key - கள்.
  • புதிய டேப்பை திறக்கு Ctrl+T அழுத்துங்கள்.
  • .com  என முடியும் இணைய முகவரிகளில் பெயரை மட்டும் தட்டச்சிட்டு Ctrl+Enter தட்டுங்கள். சுலபமாக இணைய முகவரியை தட்டச்சிட முடியும்.
  • உ.ம். www. google.com என தட்டச்சிட google என தட்டச்சிட்டு Ctrl+Enter தட்டினால் முழு முகவரியும் வந்துவிடும்.
  • Address Bar-ல் உள்ள முகவரியை முழுவதும் தேர்ந்தெடுக்க F6 அழுத்தவும்.
  • பார்த்துக்கொண்டிருக்கும் இணையப் பக்கத்தை Refress செய்ய F5 பயன்படுத்துங்கள்.
  • இணையப் பக்கத்தை முழுத்திரைக்கும் கொண்டுவர F10 அழுத்துங்கள்.
  • Download செய்வதை நிறுத்த ESc அழுத்துங்கள்.
  • பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்திலிருந்து பின் செல்ல Alt+left Aero பயன்படுத்துங்கள்.
  • பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்திலிருந்து முன் செல்ல Alt+right Aero பயன்படுத்துங்கள். 
  • ஒரு TAB -ஐ மட்டும் மூட Ctrl+w
  • அனைத்து Tabs - களையும் மூட.. Alt+F4
  • History -ஐ காண CTRL+H
  • புக்மார்க் செய்ய CTRL+B
முக்கியமான குறுக்கு விசைகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். மேலும் ஒவ்வொரு வலை உலவிக்கும் தனிப்பட்ட குறுக்குவிசைகளும் ஒரு சில உண்டு.. நேரமிருக்கும்போது அடுத்த பதிவில் ஒவ்வொரு உலவிக்கும் தனப்பிட்ட குறுக்குவிசைகளுடன் கூடிய பதிவொன்றை எழுதுகிறேன்.

இத்தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

No comments: