Sunday, January 27, 2013


டி.என்.பி.எஸ்.சி., வி.ஏ.ஓ. தேர்வில் வெற்றிப்பெற -1

போட்டித்தேர்வுகள்.. இன்று மிகக் கடினமாக மாறிவிட்டது..

போட்டித்தேர்வுகள் என்பதற்கு இப்போதுதான் அர்த்தமே சரியானதாக இருக்கிறது. உண்மையான போட்டி ஏற்பட்டிருக்கிறது. திறமைக்கு ஏற்ற போட்டியாக இந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மாறியிருக்கின்றன.

தேர்வு முறையில் மாற்றமா?

முந்தைய தேர்வு முறைக்கும் தற்போதைய தேர்வுமுறைக்கு வித்தியாசம் அதிகமிருக்கிறது. முன்பு எளிமையாக கேள்விகள் புரியும்படி இருந்தது. இப்போது அப்படியல்ல.. கேள்வியை ஒரு சிலநொடிகள் சிந்தித்தால்தான் புரிந்துகொள்ள முடியும் என்ற அளவுக்கு கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் செய்துள்ளனர்.

போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் பாடப்பகுதிகள்(Subjects) அனைத்தும் ஒன்றுதான். தேர்வாணையம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் கேள்வி-பதில்கள் அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தி, கிட்டதட்ட போட்டித்தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்களை ஆழ்ந்து சிந்தித்து எழுதும்படி செய்துவிட்டார்கள்.

இதனால் பலர் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோன்ற பிரமையுடன் தேர்வை முடித்துவிட்டு இன்றைய தேர்வு மிகவும் கடினம் என்று சொல்லிவிட்டார்கள்...இது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும்,,இனி இத்தகைய போட்டித்தேர்வுகள் அவ்வளவு சுலபமாக இருக்காது என்றே கருதலாம்..

TNPSC VAO EXAM TIPS:

சரி.. எதிர்வரும் VAO தேர்வுக்கு தயாராகிறவர்களுக்காக ஒரு சில டிப்ஸ்களைப் பார்ப்போம்..

முதலில் தேர்வுக்கூடத்தில் செய்யக்கூடாதவை, செய்யக்கூடியவை எவை என்று பார்ப்போம்.

தேர்வுக்கூடங்களுக்கு செல்லும்போது நிச்சயம் செல்போன் போன்ற இத்யாதிகளை எடுத்துச்செல்லவேண்டாம். எந்த மின்னணு சாதனங்களும் தேர்வுக்கூடத்தில் அனுமதியில்லை..எதிர்காலத்தில் கைக்கடிகாரம்(Watch) கூட கட்ட அனுமதிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். காரணம் நம்மவர்கள் தொழில்நுட்பத்தை தமக்கு சாதமாக பயன்படுத்தி எப்படியெல்லாம் காப்பி அடிக்கலாம், தேர்வில் முறைகேடுகள் செய்யலாம் என்பதை சிந்திப்பதில் வல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.. .

இரண்டாவதாக சொல்வதென்றால் பென்சில் போன்ற மற்ற எழுதுகோல்கள்.. விடைத்தாளில் நிரப்புவதற்கு ஒரு Ballpoint Pen (blue or black) மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். தேவையெனில் இதன்கூட மற்றுமொரு பேனா கூடுதலாக எடுத்துச் செல்லாம். ஏனென்றால் ஒரு பேனா எழுதவில்லை என்றால் மற்றொன்றை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தேர்வு அறையில் தேர்வுக் கண்காணிப்பாளர் கூறும் அறிவுகளை நன்றாக கேட்டறிந்து அதன்படி செயல்பட வேண்டும். முதலில் விடைத்தாள்தான் கொடுப்பார்கள்.

குறிப்பாக விடைதாள்ளில் பதிவெண், தேர்வுதாள் பெயர், தேதி போன்றவற்றை கவனமாக எழுதிவிட்டு, அவற்றிற்குரிய கட்டங்களில் பால்பாய்ண்ட் பேனால் நிரப்ப வேண்டும். கட்டங்களை நிரப்புவது முழுமையாக இருக்க வேண்டும். இடைவெளிவிட்டோ, அல்லது பாதியிலோ நிறுத்தி விட்டாலோ அது ஒரு தவறாக எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த தேவையான விவரங்களை சரியாக நிரப்பபடவில்லை என்றால் அதற்கு ஒரு மதிப்பெண் பிடித்துவிடுவார்கள்.

தேர்வுக்கான விபரக்குறிப்புகளை நிரப்பிய பிறகுதான், வினாத்தாள்கள் கொடுப்பார்கள். அதில் மறக்காமல் உங்கள் பதிவெண்ணை நிரப்பிவிடவேண்டும்.

பிறகு தேர்வுக்கூட கண்காணிப்பாளர் கூறும்போது வினாத்தாளை திறந்து வினாக்களை பார்வையிடலாம்.

நன்றாக ஒரு முறை வினாத்தாளில் உள்ள வினாக்களை பார்வையிட்ட பிறகு, விடைத்தாளில் கட்டங்களை நிரப்பத்தொடங்கலாம். 

No comments: