Sunday, January 27, 2013


TNPSC தேர்வுகள் இனி Online மூலம் எழுதலாம்

TNPSC Commissioner Nataraj
TNPSC தேர்வுகளை இனி ஆன்லைன் மூலம் எழுதலாம் என தேர்வாணைய தலைவர் திரு. நடராஜ் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் மீது நம்பிக்கை குறைந்து காணப்பட்டது.
கடந்த குரூப்-II தேர்வுக்கான வினாத்தாள் (Group-II Examination) வெளியான விஷயம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி, அதன் அதிரடி நடவடிக்கையாக அத்தேர்வை தேர்வையானையம் ரத்து செய்ததும் நினைவிருக்கலாம்.

தற்போது அதற்கான மறுத்தேர்வுக்கான (re-examination) தேதியும் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வுகளை நல்ல முறையில், நேர்மையாக நடத்துவதற்கான பல்வேறு ஏற்பாடுகளை தேர்வாணையம் செய்து வருகிறது.


அதில் முக்கியமாக தேர்வுகளனைத்தையும், இனி Online-ல் நடத்த தேர்வாணையம் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளும் எடுத்துவருகிறது.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் அனைத்துப் போட்டித்தேர்வுகளும் (Competitive examination) ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படுகிறது.

நாட்டில் மற்றத் தேர்வுகளும், ஒரு சில ஆன்லைனிலும், ஒரு சில கேள்வித்தாள் முறையிலும் நடத்தப்படுகிறது.

தற்போது தமிழ்நாட்டிலும் இத்தகைய ஆன்லைன் தேர்வு நடத்துவதன் மூலம் பல்வேறு பிரசனைகளை தீர்ப்பதோடு மட்டுமல்லாமல், உடனடியாக தேர்வுக்கான முடிவுகளையும் பெற முடியும்.

தேர்வர்கள் கணினி முன்பு அமர்ந்த பிறகு, குறிப்பிட்ட நேரத்தில் கேள்வி-விடைத்தாள் வெளியிடப்படும். அதில் தேர்வர்கள் சரியான விடையை டிக் செய்தால் போதுமானது.

ஆன்லைன் தேர்வுக்காக தகுதியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அதன்மூலம் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்வாணையத் தலைவர் (Selection Commission President) கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் அதிகளவு பொறியியல் கல்லூரிகளில் (Engineering colleges) இருப்பதால் கணினி மூலம் ஆன்லைன் தேர்வுகள் நடத்துவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்றும், விடுமுறை தினங்களிலிலேயே தேர்வை நடத்துவதால் கல்லூரிகளுக்கும் எந்த வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்கும் என்றும், மேலும் அதன் மூலம் கல்லூரி நிர்வாகத்திற்கு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த ஆன்லைன் தேர்வுமுறைகான (Online Examination System) டென்டர் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆன்லைன் தேர்வு முறையால் தேர்வர்கள் விரைவாகத் தேர்வை முடிக்க முடியும். Online தேர்வை எதிர்கொள்வதில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல், எளிமையாக இருக்கும் என்பதால், இந்த முறையை விரைவில் கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்வுக்கான மென்பொருள்கள் (TNPSC Examination Software) தயார் செய்யவதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதாக திரு நடராஜ் தெரிவித்துகிறார்.

No comments: