தேவையற்ற மின்னஞ்சல்களைத் தடுப்பது எப்படி?
How to filter spam mail in Gmail?
உங்களுக்கும் வரும் spam மின்னஞ்சல்களை தடுப்பது எப்படி?இணையத்தைப் பயன்படுத்துவதால் நம்முடைய மின்னஞ்சல்கள் பலருக்கும் தெரியவரும் வாய்ப்பிருக்கிறது. மேலும் ஏதேனும் ஒரு தளத்தில் கணக்கு உருவாக்குவதற்காக மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருப்போம்
.
இவ்வாறான தளங்களில் உள்ள படிவத்தை(login form) நிரப்பும்போது மின்னஞ்சல்களையும் சேர்த்தே உள்ளிடுவோம். இவ்வாறு உள்ளிடும் மின்னஞ்சல்களை ஒரு சில தளங்கள் சேகரித்து ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு அவற்றை விற்றுவிடுகின்றன.
இவ்வாறு மின்னஞ்சல்களை பெற்றுக்கொண்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை விளம்பரப் படுத்தும் நோக்குடனும், தங்களுடைய வலைத்தளங்களை விளம்பரப்படுத்தும் நோக்குடனும், தேவையில்லாமல் குப்பை மின்னஞ்சல்களை நம்முடைய அனுமதியில்லாமலே நமக்கு அனுப்பிவிடும்.
ஒரு சில நிறுவனங்கள் மற்றும் சில விஷமிகளும் நம்முடைய மின்னஞ்சலுக்கு தேவையற்ற தீங்கு விளைவிக்கும் மின்னஞ்சல்களையும் அனுப்பிவிடுகின்றனர்.
Gmail-ல் இத்தகை மின்னஞ்சல்களை வடிகட்டுவதற்கான வழிமுறைகள் இருக்கிறது. இது Spam மின்னஞ்சல் வகையாகப் பிரிக்கப்பட்டு நமக்கு G-mail-ல் spam மின்னஞ்சல்களாக கிடைக்கிறது. இதனைத் தடுக்கும் வழிமுறைகளைப் பார்ப்போம்.
உங்கள் மின்னஞ்சல் கணக்கில் உள்நுழைந்துகொள்ளுங்கள். அதில் பற்சக்கரம் போன்ற அமைப்புடைய படத்தில் கிளிக் செய்யுங்கள். அதில் Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
இப்போது தோன்றும் விண்டோவில் filters என்பதில் சொடுக்கவும்.
அதில் creat a new filter என்பதை சொடுக்கவும்.
அதற்கு அடுத்து தோன்றும் ப்ல்டர் Filter என்னும் பெட்டியில் has the words என்பதற்கு கீழாக in:Spam என தட்டச்சிடுங்கள். பிறகு கீழிருக்கும் create filter with this search என்ற வசதியைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்யுங்கள்.
இப்போது தோன்றும் பெட்டியில் in:spam என்ற விண்டோவில் delete it என்ற check box -ல் டிக் செய்துகொள்ளுங்கள். கூடவே also apply filter to என்பதையும் தேர்வு செய்துகொண்டு கிரியேட் ப்ல்டர் என்ற பட்டனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்யவும்.
இறுதியில் Your filter was created என்ற வாசகம் வரும்.
அவ்வளவுதான். இனி உங்கள் மின்னஞ்சல்கள் கணக்கில் Spam mail கள் வரவே வராது. உங்களுக்கு அதிக தொந்தரவு கொடுப்பவை இத்தகைய Spam மின்னஞ்சல்கள்தான். இவற்றை பில்டர் செய்வதன் மூலம் மின்னஞ்சல் மூலம் வரும் தேவையற்ற குப்பையான மின்னஞ்சல்களை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment