Sunday, January 27, 2013


பேஸ்புக் - புதிய வசதிகள் (பயனுள்ள தகவல்கள்)

பேஸ்புக்கில் புதிய வசதி - Facebook Stories

உங்கள் மலரும் நினைவுகளை வெளிப்படுத்தும் விதமாக பேஸ்புக்கின் Facebook Stories என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தும் பல்வேறு பயனர்களால் பகிரப்படும் சுவைமிக்க விஷயங்கள், கதைகள், துணுக்கள் இதுபோன்ற விடயங்களைத் தொகுத்து ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு கருப்பொருட்களில் அமைந்த விடயங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






Face Book Account திருடப்படுகிறதா? கவலை வேண்டாம்..!

ஃபேஸ்புக் கணக்கை மற்றவர்கள் திருடிவிட்டால் அதை மீட்பது அவ்வளவு சுலபமானதாக இருக்காது. தற்போது அதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது பேஸ்புக்.

இதற்கெனவே பேஸ்புக் நிபுணர்களைத் தொடர்புகொள்ள ஒரு மின்னஞ்சல் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. phish@fb.com என்ற இந்த முகவரியில் பேஸ்புக் நிபுணர்களை நேரடியாக தொடர்புகொண்டு, உங்கள் கணக்கு திருடப்பட்டாலோ, கடவுச்சொற்கள் களவாடப்பட்டிருந்தாலோ, அல்லது தொழில் தொடர்புடைய தகவல்கள் திருடப்பட்டிருந்தாலோ இதுபோன்ற உங்களைச் சார்ந்த, உங்கள் கணக்கில் உள்ள தகவல்களை அனைத்தையும் மீட்டெடுக்க முடியும்.

பேஸ்புக் நிபுணர்களைத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: phish@fb.com

வேண்டாத குழுமத்தில் விலகுவது எப்படி?
(how to leave from unwanted facebook group?)
ஏதாவது ஒரு தருணத்தில் ஒரு குழுமத்தில் இணைந்திருப்போம். அதில் தேவையற்ற விஷயங்களை பகிர்ந்திருப்பார்கள்.. நமக்கு அது பிடிக்காமல் போகலாம்.. அந்த குழுமத்திலிருந்து விலக நினைத்திருப்போம். இதுபோன்ற சூழ்நிலைகள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும்.

இவ்வாறு தேவையில்லாத Face Book Group களிலிருந்து விலகுவது எப்படி எனப் பார்ப்போம்.
  1. எந்த குரூப்பிலிருந்து விலக நினைக்கிறீர்களோ? அந்த குழுமப் பக்கத்தை திறந்துகொள்ளுங்க.. அதாவது பேஸ்புக்கில் லாகின் செய்துகொண்டு நீங்கள் விலக வேண்டிய குரூப் பக்கத்தை திறந்து கொள்ளுங்கள். 
  2. அந்தப் பக்கத்தில் வலது புறம் மேல்ப் பக்கத்தில் Settings பட்டன் இருக்கும். இது பல்சக்கரம் போன்ற உருவமுனைய சிறிய படமாக இருக்கும். அதை அழுத்துங்கள். 
  3. அதில் Leave Group என்றொரு வசதி கொடுக்கப்பட்டிருக்கும். 
  4. அதை அழுத்துங்கள். பிறகு ஒரு எச்சரிக்கை செய்து கொடுக்கும். அதில் Leave Group என்பதை அழுத்துங்கள். அவ்வளவுதான். 
இனி நீங்கள் விரும்பாத அந்த குழுமத்திலிருந்து எந்த ஒரு Update-ம் உங்களுக்கு வராது. அந்த குழுமத்திலிருந்து நீங்கள் நிரந்தரமாக விலகிவிட்டீர்கள்..

No comments: