Saturday, November 16, 2013

வெஜிடபுள் புலாவ்

பச்சை பட்டாணிகேரட்பாஸ்மதி அரிசி
  1. பாஸ்மதி அரிசி – 2 கப்
  2. பெரிய வெங்காயம் – 2
  3. கேரட் -2
  4. பச்சை பட்டாணி – 100 கிராம்
  5. பீன்ஸ் – 50 கிராம்
  6. காலிஃப்ளவர்- 100 கிராம்
  7. பச்சை மிளகாய் – 2
  8. இஞ்சி பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  9. பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  10. சீரகம்-அரைத் தேக்கரண்டி
  11. மல்லி
  12. புதினா தழை – சிறிதளவு
  13. பட்டை – ஒரு அங்குலம்
  14. கிராம்பு – 2
  15. ஏலக்காய் – 2
  16. பிரியாணி இலை – சிறிதளவு
  17. எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
  18. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
  • அரிசியை நன்கு கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • வெங்காயத்தை நீளாமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • கேரட் மற்றும் பீன்சை அரைத் துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
  • காலிஃப்ளவரை சிறியதாக நறுக்கி வெந்நீரில் அலசி வைக்க வேண்டும்.
  • பட்டை கிராம்பு ஏலக்காய் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பிரிஞ்சி இலை போட்டு தாளிக்க வேண்டும்.
  • பின்பு அதனுடன் நீளமாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதனுடன் இஞ்சி பூண்டு மற்றும்  அரைத்த மசாலா சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
  • இறுதியாக அதில் தேவையான காய்கறிகள் அனைத்தும் சேர்த்து  மிதமாக கிண்ட வேண்டும்.
  • பின்பு ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து நான்கு கப் நீர் ஊற்றி கொதிக்கும் வரை மூடி வைக்க வேண்டும்.
  • கொதித்ததும் உப்பு சேர்த்து மூடி வைக்க வேண்டும்.
  • பத்து நிமிடம் கழித்ததும் மூடியை திறந்து சாதத்தை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தேசியக்கொடியைப் போல் அலங்கரிக்க வேண்டுமென்றால் சாதத்தின் இரு ஓரங்களிலும் அதாவது ஒரு பக்கம் பச்சை நிறத்தில் இருக்கும் பீன்ஸ், பட்டாணி, மல்லி மற்றும் புதினா இலைகளையும்
  • மற்றொரு பக்கத்தில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் கேரட்டையும், நடுவில் சாதத்தையும் வைத்துப் பார்த்தால் நம் நாட்டு தேசியக் கொடிப்போல் காட்சியளிக்கும் அழகைப் பார்த்து ருசித்து சாப்பிடலாம்.
மருத்துவக் குணங்கள்:
  • காய்கறிகளில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துகளும் அடங்கியுள்ளன.
  • காய்கறிகள் நம் ‌உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
  • நம் உடல் வலிமையைக் கூட்டுகிறது.
  • காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதால் ஆபத்தான நோய்களான இதயம் சம்பந்தமான நோய்கள், அதிக ரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய் ஆகிய நோய்களில் இருந்து காய்கறிகள் நம்மைப் பாதுகாக்கிறது.
  • காய்கறியில் வைட்டமின்கள்,உயிர்சத்துகள், நார்ச்சத்துகள், கால்சியம், அயன் மற்றும் ஜிங் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன.
  • இத்தகைய சத்துகள் மற்றும் நன்மைகள் நிறைந்த காய்கறிகளை நாம் அனைவரும் விரும்பி உண்போம்.
”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழியை உணர்ந்து
நோயின்றி வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

No comments: