தேவையானப் பொருள்கள்:
- அரிசி சாதம் – அரை கப்,
- தயிர் – 2 கப்,
- பச்சை மிளகாய் – 1,
- கேரட்- 1,
- மாங்காய் – 1,
- மாதுளை – கால் கப்,
- திராட்சை – 20,
- ஆப்பிள் – 1,
- கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை:
- பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- கேரட் மற்றும் மாங்காயை துருவிக் கொள்ள வேண்டும்.
- ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- தயிருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை வேக வைத்த அரிசி சாதத்துடன் கலந்து வைக்க வேண்டும்.
- பின்பு அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் நறுக்கிய பழ வகைகள் சேர்த்து நன்கு கிண்ட வேண்டும்.
- இப்போது சூடான பழ தயிர் சாதம் தயார்.
மருத்துவக் குணங்கள்:
- தயிரில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளது,இதில் பழ வகைகள் சேர்ப்பதால் வைட்டமின் சத்தும் நிறைந்துள்ளது.
- இவற்றில் புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இவை ஜீரண சக்தியை அதிகம் பெற்றுள்ளது.
- தயிர் நன்மை தரும் பாக்டீரியாக்களை உண்டாக்குகின்றன.
- நன்மை தரும் பாக்டீயாக்களை உண்டாக்குவதால் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கின்றன.
- இவை வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும் ஒரு அருமருந்தாகும்.
- தயிரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தலையில் தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
- இவை முடியை மிருதுவாக்கும் பண்பைப் பெற்றுள்ளது.
- இவை நம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
- மேலும் இவற்றை ஒரு குளிர்பானமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்தகைய நன்மைகள் நிறைந்த தயிரை நாம் அனைவரும் பருகுவோம்.
”100 டிகிரி வெயில் அதில் 0 டிகிரி குளிர் பழ தயிர் சாதம்” எனபதை உணர்ந்து
வெயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு நோயின்றி வாழ்வோம்;
வாழ்வில் வளம் பெறுவோம்.
”100 டிகிரி வெயில் அதில் 0 டிகிரி குளிர் பழ தயிர் சாதம்” எனபதை உணர்ந்து
வெயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு நோயின்றி வாழ்வோம்;
வாழ்வில் வளம் பெறுவோம்.
No comments:
Post a Comment