சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சருமம் உலர்ந்து இருந்தால் பொலிவில்லாமல் இருப்பார்கள். இதுபோன்ற உலர் சருமம் உள்ளவர்கள் ஆலிவ் எண்ணெய் தடவி வந்தால் உலர் சருமம் படிப்படியாக நீங்கும்.
வெயிலில் இருந்து வந்த பிறகும் ஆலிவ் எண்ணெயை முகம், கழுத்து பகுதிகளில் தடவி வந்தாலும் உலர் சருமத்தைத் தவிர்க்கலாம். மேலும் சருமம் மிருதுவாக குளிக்கும் நீரில் 2 கப் பால் பவுடரை கலந்து உடல் முழுவதும் தடவி பிறகு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறில் கொஞ்சம் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் வழவழப்பாக பொலிவு பெறும்.முகத்தில் ஆரஞ்சுப் பழச்சாறு தடவி வந்தால் முகம் மிருதுவானதாக மாறும்.
மிதமான சுடுநீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்து வந்தால் பாதங்கள் மிருதுவாகும். கண்களை மூடி அதன் மீது வெள்ளரிக்காய் பிஞ்சை வைத்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். கண் கருவளையங்களை நீக்க பாதாம் கொட்டைகளை அரைத்து தடவி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். |
No comments:
Post a Comment