Saturday, November 16, 2013

வெண்டைக்காய் பொரியல்

வெண்டைக்காய்இஞ்சிதக்காளி
  1. வெண்டைக்காய் = அரை கிலோ
  2. பச்சை மிளகாய் = 5
  3. வெங்காயம் = 2
  4. தக்காளி[/wikipop] = கால் கிலோ
  5. இஞ்சி = சிறிது
  6. கடுகு = அரை ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு = 2 ஸ்பூன்
  8. கடலை பருப்பு = 2 ஸ்பூன்
  9. எண்ணெய் = 4 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • வெண்டைக்காயை அலம்பி நீரை வடித்து விட்டு காம்பு பகுதியையும், முனையையும் நறுக்கி விட்ட பின் வட்டமாக நறுக்கவும். இதனோடு சிறிது உப்பு கலந்து தட்டில் சாய்வாக வைக்கவும்.
  • சிறிது நேரத்தில் இதிலிருந்து தண்ணீர் வெளியேறும். இதை வடித்து எடுத்து விடவும். பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி பொடியாக நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, இஞ்சி சேர்த்து கிளறவும்.
  • பின் இதில் வெண்டைக்காயை போட்டுப் புரட்டிக் கொள்ளவும்.
சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டாவோடு பரிமாறலாம்.

No comments: