Saturday, November 16, 2013

பீர்க்கங்காய் பொரிச்ச குழம்பு

பீர்க்கங்காய்பயத்தம் பருப்புபச்சை மிளகாய்
தேவையான பொருள்கள்:
  1. பீர்க்கங்காய் = அரை கிலோ
  2. பச்சை மிளகாய் = 3
  3. வெங்காயம் =  50 கிராம்
  4. தக்காளி = 2
  5. துவரம் பருப்பு = 50 கிராம்
  6. பயத்தம் பருப்பு = 50 கிராம்
  7. பெருங்காயம் = சிறிதளவு
  8. மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
  9. மிளகாய் பொடி = அரை ஸ்பூன்
  10. வெல்லம் = சிறு துண்டு
  11. சீரகம் = அரை ஸ்பூன்
  12. கடுகு = அரை ஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
  14. கடலை பருப்பு = 1 ஸ்பூன்
  15. எண்ணெய் = 2 ஸ்பூன்
  16. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • பீர்க்கங்காயை தோல் சீவி விட்டு பின் கால் அங்குல துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி நறுக்கவும்.
  • துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து குழைய வேக விட்டுக் கொள்ளவும்.
  • வாணலியில் வெங்காயம், தக்காளி, பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் கடைந்த பருப்பை சேர்த்து உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
  • வெந்ததும் வெல்லம் சேர்த்து மேலும் சிறிது கொதிக்க விட்ட பின் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொட்டவும்.
சுவையான பீர்க்கங்காய் பொரிச்ச குழம்பு தயார். இதை இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, சப்பாத்தி, பரோட்டா, அடை போன்றவற்றுடன் பரிமாறலாம்.

No comments: