தேவையான பொருள்கள்:
- கொத்தவரைக்காய் = 250 கிராம்
- வெங்காயம் = 2
- மிளகாய் வற்றல் = 3
- இஞ்சி = சிறிதளவு
- மஞ்சள் பொடி = சிறிதளவு
- தேங்காய் = கால் மூடி
- கடுகு = அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- கொத்தவரைக்காயை ஆய்ந்து பொடியாக நறுக்கவும். வெங்காயம் பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி தட்டிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதனோடு தட்டிய இஞ்சியையும் சேர்க்கவும்.
- அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி கொத்தவரைக்காயை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். அரை கப் தண்ணீர் விட்டுப் பின் மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.
- நடுவில் ஓரிரு முறை கிளறி விடவும். இல்லாவிட்டால் அடியில் கருகி விடும். கடைசியாக துருவிய தேங்காய் சேர்த்து பரிமாறவும்.
சுவையான கொத்தவரைக்காய் பொரியல் தயார். இதை ரைஸ், சப்பாத்தியோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
- கொத்தவரைக்காயில் புரதம், ஃபைபர், ஊட்டச்சத்துகள் அதிகம் இருப்பதால் இது நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கிறது.
No comments:
Post a Comment