Wednesday, November 20, 2013

டெல்லி


altடெல்லி - இரவில் மிக அழகான ஊர், எங்கும் விளக்கொளியில் நனையும் தெருக்களும், கட்டிடங்களும், எதையோ துரத்தி ஓடும் வாகனங்களும், அந்த நேரத்தில் கூட அலங்காரம் கலையாத பெண்களும், உற்சாகமான இளைஞர்கள் ....

குதுப்மினார், இது மட்டுமல்ல அங்குள்ள அனைத்து கட்டிடங்களுமே முகலாயர்கள் வாழ்க்கையின் மிச்சங்கள். எங்கும் எதிலும் பிரமாண்டம். மன்னர்கள் வாழ்க்கையின், சுகம், வீரம், போட்டி, அழிவு, காதல், வாழ்க்கை முறை, சதி, தோல்வி, எல்லாவற்றையும் கூறும் வரலாற்று சான்றுகள். கண்டிப்பாக எல்லோரும்

ஒரு முறை ஏனும் காண வேண்டிய இடங்கள்.

இண்டியா கேட் : போரில் மரணம் அடைந்த வீரர்களுக்கு உள்ள நினைவு ஜோதி. அங்கு நின்று அந்த நாட்களை நினைவு கூறும் போது தியாகத்தின் வீரியம் உணரமுடியும்.

பஹாய் லோட்டஸ் டெம்பிள் : ஒரு அழகிய கட்டிட கலை மற்றும் தியான மண்டபம்,

இந்திராகாந்தி இல்லம் : ஒரு இறுக்கமான மனநிலையுடன் மட்டுமே இங்கிருந்து வெளி வர முடியும். அவர் பயன்படுத்திய அறைகள், புத்தகங்கள், பதக்கங்கள், விருதுகள், முக்கியமான நிகழ்வுகளின் புகைபடம், திருமண புடவை என்று எல்லாமே காட்சிக்கு. அதிலும் அவர் கொலை செய்யப்பட அன்று அணிந்திருந்த புடவை, செருப்பு ரத்த கரையின் மிச்சத்துடன்....

அடுத்தது ராஜீவ்காந்தியின் நினைவு இல்லம், அவரும் சோனியா காந்தியும் குழந்தைகளுமான புகைப்படங்கள், அவரின் படுகொலை நடந்த போது அணிந்திருந்த ஆடைகள்.... ஒரு குடும்ப தலைவனாக அவரை இழந்த குடும்பத்தாரின் வலி.... எது எப்படி இருந்தாலும் இந்திரா காந்தியின் குடும்பத்தினரின் தியாகம் வேறு எதை கொண்டும் நிரப்ப முடியாதது. அதே போல் நேரு நினைவு இல்லமும் பாரமரிக்க படுகிறது. அங்கே இந்த மூவருக்கும் அணையா விளக்கு உள்ளது.

செங்கோட்டை : பாதிக்கும் மேல் ராணுவ கட்டுபாட்டில், இதே போல் தான் ஆக்ரா கோட்டையும் உள்ளதாம். அக்பர் அவர் தலைநகரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றிய போது கட்டியதால், இரண்டும் ஒன்று போல் இருக்கிறது.

காந்தி சமாதி : மலர் அலங்காரத்துடன் எப்போதும் எரியும் ஜோதியுடன் அந்த இடமே பார்க்க ஒரு தியான மண்டபம் மாதிரி இருந்தது.  அந்த தனிமையும், இருட்டும், குளிரும், காந்தி சமாதியும் அமைதியும் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவானது.

No comments: