Saturday, November 16, 2013

உருளைக்கிழங்கு மசாலா குழம்பு

உருளைக்கிழங்குவெங்காயம்பூண்டு
தேவையானபொருள்கள்:
  1. உருளைக்கிழங்கு- கால் கிலோ,
  2. பூண்டு- 2 பல்,
  3. வெங்காயம்- 1,
  4. தக்காளி – 1,
  5. கீறிய பச்சை மிளகாய்   – 1,
  6. புளி – நெல்லிக்காய் அளவு,
  7. கடுகு – அரை ‌டீஸ்பூன்
  8. உளுத்தம்பருப்பு – அரை ‌டீஸ்பூன்
  9. சீரகம் – அரை ‌டீஸ்பூன்
  10. மஞ்சள் – அரை ‌டீஸ்பூன்,
  11. கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
  12. குழம்பு பொடி – ஒரு டீஸ்பூன்,
  13. கறிவேப்பிலை,
  14. எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்,
  15. மிளகாய்த்தூள் – தேவையான அளவு,
  16. உப்பு  – தேவையான அளவு.
செய்முறை:
  • உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்க வேண்டும்.
  • சட்டியில் எண்ணெ‌யை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் சூடானதும் உளுந்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.
  • நறுக்கிய வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தக்காளி,உருளைக்கிழங்கு,  ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்adecக வேண்டும்.
  • மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு  பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
  • பின்பு  புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும்.
  • இறுதியாக உப்பு போட்டு, நன்றாக கொதித்ததும் இறக்க வேண்டும்.
மருத்துவக் குணங்கள்:
  • உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன.
  • உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் கிடைக்கின்றன.
  • உருளைக்கிழங்கு அதிக நார்ச்சத்தும்,  பொட்டாசியம் சத்தும் கொண்டது.
  • உடலைஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
  • பச்சை உருளைக்கிழங்கு வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள்ஆகியவற்றைக் குணமாக்க வல்லது.
  • உருளைக்கிழங்கு சாற்றை தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் மற்றும் இரப்பைக்கோளாறுகள் நீங்கும்.
“ருசியான உணவு உண்போம் சுவையானஆ‌‌‌ரோக்கியம் காண்போம்”.

No comments: