Saturday, November 16, 2013

சுரைக்காய் குழம்பு

சுரைக்காய்பச்சை மிளகாய்வெங்காயம்
  1. சுரைக்காய் = 1
  2. பச்சை மிளகாய் = 1
  3. வெங்காயம் = 1
  4. இஞ்சி = சிறிய துண்டு
  5. மிளகாய் தூள் = 2 ஸ்பூன்
  6. புளி = சிறிய உருண்டை
  7. தேங்காய் = 2 துண்டுகள்
  8. சீரகம் = 1 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் = சிறிதளவு
  10. மல்லித்தூள் = 2 ஸ்பூன்
  11. எண்ணெய் = தேவையான அளவு
  12. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • சுரைக்காயை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்து கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகத்தை அரைத்து கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.
  • பிறகு கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளியை கரைத்து ஊற்றி மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
  • பிறகு சுரைக்காய், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து சுரைக்காய் நன்றாக வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சுவையான, ஆரோக்கியமான சுரைக்காய் குழம்பு தயார். இதை அனைத்து வகையான சாதம், தோசை, ஆப்பம் மற்றும் இட்லி போன்றவற்றோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • சுரைக்காயின் மிக முக்கிய குணமாக உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மை கொண்டது. வெப்பம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குறைக்கும் திறன் மிக்கது.
  • உடலில் தேவையற்ற நீர் அனைத்தும் வியர்வை மற்றும் சிறுநீராக வெளியேற உதவும். சிறுநீர் பிரச்சனை வராமல் சிறுநீர் நன்கு வெளியேறும். மலச்சிக்கல் குறையும்.
  • தினமும் சுரைக்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை குறைக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலை வலிமைப்படுத்தும்.
  • உடலில் தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் பருமன் குறைய சுரைக்காய் சிறந்த உணவு.
  • முக்கியமாக சுரைக்காயை சமைக்காமல் சாப்பிடுவதை தவிர்க்கவும். சமைத்த சுரைக்காயில் மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகிறது.
சுரைக்காய் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமான வாழ்வோம்.

No comments: