Saturday, November 16, 2013

தானிய காய்கறி சாம்பார்

தானிய காய்கறி சாம்பார்தானிய கலவைகாய்கறி கலவை
தேவையான பொருள்கள்:
  1. தானிய கலவை = அரை கப்
  2. துவரம் பருப்பு = 1 கப்
  3. காய்கறி கலவை = 2 கப்
  4. தக்காளி = 2
  5. வெங்காயம் = 1
  6. சாம்பார் தூள் = 3 ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் = அரை ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் = சிறிதளவு
  9. புளி = சிறிய உருண்டை
  10. கடுகு = தாளிக்க தேவையான அளவு
  11. வெந்தயம் = தாளிக்க தேவையான அளவு
  12. உளுந்து = தாளிக்க தேவையான அளவு
  13. சீரகம் = தாளிக்க தேவையான அளவு
  14. கொத்தமல்லி இலை = சிறிதளவு
  15. கறிவேப்பிலை = சிறிதளவு
  16. எண்ணெய் = தேவையான அளவு
  17. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • தானியங்களை நன்றாக ஊற வைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கு கொள்ளவும்.  சாம்பாருக்கு தேவையான காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்.
  • ஊற வைத்த தானியங்களுடன் துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். இவை நன்றாக வெந்ததும் அதில் நறுக்கிய காய்கறிகள், தக்காளி, வெங்காயம், சாம்பார் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
  • நன்றாக வெந்ததும் புளியை கரைத்து புளிக்கரைசலை ஊற்றவும். பிறகு பெருங்காய‌த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
  • பிறகு கடுகு, வெந்தயம், உளுந்து, சீரகம் மற்றும்  கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான “தானிய காய்கறி சாம்பார்” தயார். இதை அனைத்து விதமான சாதத்தோடும், சப்பாத்தி, தோசை, இட்லி போன்றவற்றோடும் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
  • தானியத்தில் வைட்டமின் B, வைட்டமின்  E மற்றும் தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம் உள்ளது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.
  • இதனால் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் நீரிழிவை குறைக்கிறது. குறைந்த இரத்த அழுத்தம், மலச்சிக்கல் மற்றும் மற்ற செரிமான கோளாறுகள், எடையை கட்டுப்படுத்துகிறது.
உடலுக்கு ஆரோக்கியமான, சுவை நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக நோயின்றி வாழ்வோம்.

No comments: