- மிதி பாகற்காய் = தேவையான அளவு
- தேங்காய் பால் = 1 கப்
- தக்காளி = 2
- சின்ன வெங்காயம் = அரை கப்
- பூண்டு = 5 பல்
- மிளகாய் தூள் = தேவைக்கேற்ப
- மஞ்சள் தூள் = சிறிதளவு
- குழம்பு தூள் = 2 ஸ்பூன்
- புளி = சிறிய உருண்டை
- எண்ணெய் = தேவையான அளவு
- உப்பு = தேவையான அளவு
- கறிவேப்பிலை = தாளிக்க
செய்முறை:
- பாகற்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து இரண்டாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி கொள்ளவும்.
- பிறகு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பூண்டு போட்டு வதக்கி கறிவேப்பிலை போட்டு பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் குழம்பு தூள். மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- பிறகு வேக வைத்த பாகற்காயை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
- பிறகு புளியை கரைத்து புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- நன்றாக கொதித்ததும் தேங்காய் பாலை ஊற்றவும். எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான பாகற்காய் குழம்பு தயார். இதை அனைத்து விதமான சாதத்தோடும் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
- பாகற்காயில் புரோட்டீன், கலோரி, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் “பி” காம்ளெக்ஸ் மற்றும் வைட்டமின் “சி” ஆகியவை காணப்படுகிறது.
- பாகற்காய் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியை தூண்டும்.
- அதிக பித்தத்தை குறைக்கும். இருமல், இரைப்பு, மூலம், சுரம் ஆகியவற்றை குறைக்கும் குணம் நிறைந்தது.
- பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிக சிறந்த மருந்தாகும்.
இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
No comments:
Post a Comment