Saturday, November 16, 2013

வேர்க்கடலை குழம்பு

தேங்காய்வேர்க்கடலைநறுக்கிய வெங்காயம்
  1. வேர்க்கடலை =அரை கப்,
  2. தேங்காய் = 2 துண்டுகள்,
  3. கடுகு = தலா ஒரு ‌டீஸ்பூன்,
  4. உளுத்தம் பருப்பு = ஒரு ‌டீஸ்பூன்,
  5. சீரகத்தூள் = ஒரு ‌டீஸ்பூன்,
  6. புளிக்கரைசல்,
  7. நறுக்கிய வெங்காயம் = தலா ஒரு டேபிள் ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் = ஒன்றரை டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள் = கால் டீஸ்பூன்
  10. கறிவேப்பிலை
  11. சமையல் எண்ணெய்
  12. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை ஊற வைக்க வேண்டும். பின் அதனை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • புளிக்கரைசலை ஒரு பாத்திரத்தில்  எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தேங்காய், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள  வேண்டும்.
  • பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.
  • கொதித்ததும் வேக வைத்த வேர்க்கடலையை உள்ளே போட வேண்டும்.
  • பின்பு நன்கு கொதித்ததும் மற்றும் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு,  சீரகத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
  • பொன்னிறமாக மாறியதும் அதனை கொதிக்கும் குழம்பில் சேர்த்து இறக்கி வைக்க வேண்டும். இப்போது சூடான வேர்க்கடலைக் குழம்பு ரெடி.
மருத்துவக் குணங்கள்:
  1. வேர்க்கடலையானது ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருளாகும்.
  2. இதில் கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
  3. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகும்.
  4. வெங்காயத்தில் வைட்டமின் ”சி” சத்து நிறைந்துள்ளது.
  5. இவற்றை உண்பதால் உடல் வலிமைப் பெறுகிறது.
  6. எந்த ஒரு காரியத்திலும் சரியான தீர்மானம் எடுக்க உதவுகிறது. இவை அறிவை வளர்க்கிறது.
  7. வெங்காயத்தை சாப்பிடுவதால் அதிகமான காய்ச்சலைக் குணப்படுத்துகிறது.
”நம் தேசத்தலைவர் காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு “வேர்க்கடலை” ஆகும். அத்தகைய வேர்க்கடலையால் செய்யப்பட்ட உணவை நாம் அனைவரும் ருசியோடு உண்போம்.குசியோடு வாழ்வோம்.”

No comments: