தேவையான பொருள்கள்:
- அவல் = அரை கப்
- துவரம் பருப்பு = 50 கிராம்
- உருளைக்கிழங்கு = 3
- வெங்காயம் = 1
- பச்சை மிளகாய் = 3
- சீரகம் = 1ஸ்பூன்
- உப்பு = தேவையான அளவு
- எண்ணெய் = தேவையான அளவு
- கொத்தமல்லி இலை = சிறிதளவு
செய்முறை:
- கெட்டி அவலாக எடுத்து 20 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். நன்கு ஊறியதும் நீரை வடித்து வைத்து கொள்ளவும்.
- சுத்தமான துவரம் பருப்பை எடுத்து அரைத்து மாவாக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்து கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஊறிய அவல், அரைத்த துவரம் பருப்பு மாவு, மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக பிசையவும்.
- பிறகு இதனுடன் கொத்தமல்லி இலையை நறுக்கி போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி வைத்து கொள்ளவும்.
- பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வடை போட்டு பொன்னிறமாக எடுத்து சூடாக பரிமாறவும்.
மருத்துவ குணங்கள்:
- அவலில் கலோரிகள் அதிகம் காணப்படுகிறது. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், சர்க்கரை, ஃபைபர், சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை காணப்படுகிறது. பித்தத்தை குறைக்கும். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்றவை குணமாகும். சோர்வை குறைத்து உடலுக்கு வலிமை தரும். அதிகப்படியான எடையை குறைக்கும்.
- உருளைக்கிழங்குகளில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
- உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
No comments:
Post a Comment