தேவையான பொருள்கள்:
- கொண்டைக்கடலை (கருப்பு) = 1 கப்
- தக்காளி = 1
- வெங்காயம் = 1
- பூண்டு = 2 பல்
- இஞ்சி = அரை துண்டு
- தேங்காய் = 2 துண்டுகள்
- சீரகம் = 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் = தேவையான அளவு
- மல்லித்தூள் = 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் = அரை ஸ்பூன்
- புளி = சிறிய உருண்டை
- கடுகு = 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
- எண்ணெய் = தேவையான அளவு
- உப்பு = தேவையான அளவு
- கறிவேப்பிலை = தேவையான அளவு
செய்முறை:
- கொண்டைக்கடலையை இரவே ஊற வைத்து கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் சீரகத்தை விழுதாக அரைத்து கொள்ளவும். ஊற வைத்த கடலையை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு மற்றும் இஞ்சி போட்டு கிளறி வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும்.
- வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
- தக்காளி சிறிது வெந்ததும் தேங்காய், சீரக விழுதை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து பிறகு வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு கிளறி புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சூடான, ஆரோக்கியமான “கொண்டைக்கடலை புளிக்குழம்பு” தயார். இதை சாதம், சப்பாத்தி, பூரி, தோசை மற்றும் இட்லி போன்றவற்றோடு பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
மருத்துவ குணங்கள்:
- கொண்டைக்கடலையில் புரதம், கலோரி, நார்ச்சத்து, மாவுச்சத்து போன்றவை காணப்படுகிறது.
- மேலும் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் ஆகியவை அதிக அளவில் நிறைந்துள்ளன.
- உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க முளைக்கட்டிய கொண்டைக்கடலையில் இருக்கும் ஹார்மோன் பெரிதும் உதவுகிறது. நீரிழிவு இருப்பவர்கள் சாப்பிட கூடிய உணவு. கொழுப்பு மிக குறைந்த அளவே காணப்படுகிறது.
- குறிப்பாக வெள்ளை கொண்டைக்கடலையை விட கருப்பு கொண்டைக்கடலையில் அதிக அளவில் நார்ச்சத்து காணப்படுகிறது.
இவ்வாறு உடலுக்கு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
No comments:
Post a Comment