பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் வெளிநாட்டினர் உட்பட 4 லட்சத்து 61 சுற்றுலா பய ணிகள் வந்ததன் மூலம் அரசுக்கு 2 கோடியே 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சா வரத்தில் வன சுற்றுலா மையம் உள்ளது. 1,358 ஹெக்டர் பரப்பில் சதுப்பு நிலக் காடுகளில் 4,444 கால்வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண்,சிறு, கருங்கண்டன் என18 க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்கள் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களை தடுக்கும் அர ணாக இக்காடுகள் அமைந் துள்ளது. மூலிகை தன்மை யுள்ள காற்றை சுவாசிப் பதால் பல்வேறு நோய்கள்
குணமடைகிறது. காடுகளை பாதுகாக்க 1984 ஜூன் 16ல், 5 ஏக்கர் பரப்பில் 6 படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங் கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடு களின் நடுவில் 6 காட் டேஜ், 20 கட்டில், 2 டார் மென்டரியுடன் தங்கும் விடுதி அமைக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து கூடுதல் பட குகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதில் சுற்றுலா பயணிகள் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க குடை பிடித்தும் ,தொப்பிகள் அணிந்து ஆனந்தமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.
இங்குள்ள மாங்குரோவ் காடுகள் என்னும் சதுப்பு நில காட்டில் 4 ஆயிரம் வாய்க்கால்கள் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால்கள் வழியாக படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் காடுகளை ரசித்து வண்ணம் உள்ளனர். காடுகளுக்கு நடுவே சிறிய வாய்க்காலில் படகில் சென்று மாங்குரோவ் மரங்களை தொட்ட படி பயணம் செய்வது மனத்திற்கு மகிழ்ச்சியை தருகிறது.
தற்போது அக்னி வெயில் கொளுத்திவருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களுக்கு சென்று வருகின்றனர்.ஆனால் அங்கு நடுத்தர மக்கள் சென்று வர முடியாது. இவற்றிற்கான செலவு அதிகம் என்பதால் நடுத்தர மக்கள் அங்கு செல்வதில்லை.இருப்பினும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு ஊட்டியாகவும், கொடைக்கானல் ஆகவும் இந்த பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது.
காடுகளை படகு மூலம் ரசிப்பதற்காக சுற்றுலா துறை சார்பில் 38 துடுப்பு படகுகளும், 8 மோட்டார் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துடுப்பு படகில் ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 வசூல் செய்யப்பட்டு வருகிறது.மோட்டார் படகில் 8 பேர் பயணம் செய்யலாம். இதில் 1 மணி நேரத்திற்கு 8 பேருக்கு ரூ.1200 வசூ லிக்கப் பட்டு வருகிறது. இதே படகில் 2 மணி நேரத்திற்கு சவாரி செய்ய ரூ.2 ஆயிரம் வசூலிக்கப் படுகிறது.படகு சவாரி செய்ய குறைந்த கட்டணமே வசூல் செய்வதால் இங்கு அனைத்து தரப்பு மக்களும் எளிதில் வந்து செல்கின்றனர்.
பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு சிதம்பரத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. கடலூரிலிருந்து பரங்கிப்பேட்டை வழியாகவும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் எளிதில் இந்த சுற்றுலா மையத்திற்கு செல்ல முடியும்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.கடந்த மே மாதம் 24 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.தற்போது மே மாதம்( 5-ந் தேதி )நேற்று வரை 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இந்த சுற்றுலா மையத்திற்கு வருகை தந்துள்ளனர்.இன்னும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுற்றுலாத்துறை மேலாளர் ஹரி கரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment