Saturday, November 16, 2013

அவல் பொங்கல்

அவல்வெல்லம்பாசிப்பயிறு
தேவையான பொருட்கள்:
செய்முறை:
  1. வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
  2. பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ள வேண்டும்.
  3. அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
  4. வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.
  5. வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்த அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
  6. அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.
  7. நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை பழம், வறுத்த மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி விடவும்.நெய் மணத்துடன் கமகமக்கும் சுவையான அவல் பொங்கல் தயார்.
மருத்துவக் குணங்கள்:
  • அவலை குழைய வேக வைத்து உட்கொள்ள கழிச்சல், வயிற்று வலி தீரும்.
  • அவலில் பாலும், நெய்யும் சேர்த்து உண்ண உடலுக்கு வலிமை உண்டாகும்.

No comments: