உடல் எடை குறைய ஜிம்முக்கு சென்று தான் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே சில எளிய பயிற்சிகளை செய்து வந்தால் போதுமானது. அத்தகைய பயிற்சிகளில் முக்கியமானது இந்த பயிற்சி. விரைவில் நல்ல பலன் தரக்கூடியது.இந்த பயிற்சி செய்ய விரிப்பில் கால்களை 2 அடி இடைவெளி விட்டு நின்று கொள்ளவும். பின்னர் கைகளை தோள்பட்டைக்கு நிகராக முன்புறமாக நீட்டிக் கொள்ளவும். கைகளுக்கு இடையே 1 அடி இடைவெளி
இருக்க வேண்டும்.
இந்த நிலையில் மெதுவாக முட்டியை மடக்கி சேரில் அமர்வது போல் (படத்தில் உள்ளபடி) அமரவும். கைகளை மடக்க கூடாது. பின்னர் எழுந்து விடவும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முதல் 20 முறை செய்யலாம். பின்னர் நன்கு பழகிய பின்னர் 20 முதல் 30 முறை செய்யலாம்.
இந்த பயிற்சி செய்யும் போது கால் தொடை மற்றும் கால் மூட்டிக்கு கீழ் பகுதியில் நல்ல இறுக்கம் தெரியும். பின் சில நிமிடம் ஒய்வு எடுத்த பின்னர் மறுபடியும் சேரில் அமருவது போல் அமர்ந்த நிலையில் 20 விநாடிகள் இருக்கவும். பின்னர் பழைய நிலைக்கு வரவும்.
இவ்வாறு 5 செட்டுகள் செய்ய வேண்டும். இந்த இரு பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் 3மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சி செய்வதால் கால்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும்.

No comments:
Post a Comment