சிலருக்கு இடுப்பு மற்றும் கால்களில் அதிகப்படியான சதை இருக்கும். இவர்கள் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் கீழே கூறப்பட்டுள்ள இந்த பயிற்சியை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பின்னர் கால்களை முட்டி வரை மடக்கவும். பின்னர் கைகளை தரையில் ஊன்றி, இடுப்பை சற்று மேலே தூக்கிய நிலையில் வலது காலை மட்டும் முன்புறமாக நேராக
நீட்டவும்.
இடது காலை தூக்க கூடாது. இந்த நிலையில் 10 விநாடிகள் இருந்த பின்னர் கால் மற்றும் இடுப்பையும் சேர்த்து (படத்தில் உள்ளபடி) நேராக மேலே தூக்கவும். தலை, மார்பு மட்டும் தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது.
இந்த நிலையில் 10 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு கால்களை மாற்றி இடது காலில் செய்யவும். இவ்வாறு இந்த பயிற்சியை தொடர்ந்து 5 முதல் 10 செட்டுகள் செய்ய வேண்டும். இந்த 2 செட் செய்யும் போதும் ஒவ்வொரு நிலையிலும் 10 முதல் 15 விநாடிகள் இருக்க வேண்டும்.
இந்த பயிற்சி கால், தொடை, இடுப்பு பகுதிகளுக்கு நல்ல வனப்பை கொடுக்கிறது. இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

No comments:
Post a Comment