Monday, December 30, 2013

கால்களை வலுவாக்கும் பயிற்சி

கால்களை வலுவாக்கும் பயிற்சிதற்போதுள்ள காலகட்டத்தில் உடற்பயிற்சிகள் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பயிற்சி உபகரணங்கள் இல்லாமல் செய்யும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தரக்கூடியவையே. வீட்டில் இருக்கும் பெண்கள் பயிற்சி உபகரணங்கள் இல்லாமல் செய்யும் சில பயிற்சிகள் உள்ளன. அவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. இந்த பயிற்சி மிகவும் எளிமையானது. முதலில் இந்த பயிற்சி செய்யும் போது சற்று கடினமாக
இருக்கும். 

ஆனால் விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் சுவரை ஒட்டி நேராக நின்று கொள்ளவும். பின்னர் கைகளை மேலே தூக்கி சுவற்றில் படியும் படி வைக்கவும். பின்னர் மெதுவாக கீழே இறங்கி சேரில் அமருவது போல் அமரவும். 

இந்த நிலையில் வலது காலை மடத்து இடது கால் மேல் (படத்தில் உள்ளபடி) போடவும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். பின்னர் கால்களை மாற்றி இடது பக்கம் செய்ய வேண்டும். 

இரு கால்களுக்கு செய்வது தான் ஒரு செட். இவ்வாறு 5 முதல் 7 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் வயிறு, கால்களில் உள்ள அதிகப்படியான சதை குறைவதை காணலாம்.

No comments: