நடைப்பயிற்சி தசைகளை இதமாக்கி உடம்பை ஓய்வு நிலையில் வைக்கிறது. இதனால் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க முடியும். கால் மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்பை நடைப்பயிற்சி கரைய வைக்கிறது. தினமும் நடக்கும் போது கால்கள் மிகவும் வலிமையடைகிறது.
தினமும் நடப்பதற்கு என நாம் நிச்சயம் சில நிமிடங்களை ஒதுக்குவது இன்றியமையாத விஷயமாக உள்ளது. நடைப்பயிற்சி தான் நமக்கு மிகச் சிறந்த, எளிமையான மற்றும் உடல் திசுக்களை காயப்படுத்தாத இயற்கையான உடற்பயிற்சியாக
உள்ளது.
இது மிகவும் பாதுகாப்பான, எல்லா மக்களும் செய்யக் கூடிய, மிகுந்த நன்மைகள் கொடுக்கக் கூடிய மற்றும் செலவில்லாத பயிற்சியாக உள்ளது. தினசரி செய்யும் நடைப்பயிற்சியால் நமது இதயம் சீராகிறது. நுரையீரல் மற்றும் உடலின் கீழ்ப்பகுதியில் உள்ள தசைகளின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.
ஒரு சராசரி இளைஞர் 30 நிமிடங்களாவது தினசரி நடப்பது உகந்ததாக கருதப்படுகின்றது. தினசரி நாம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டால், அது நாம் நினைப்பதை விட அதிக அளவில் பலன்களை தருகின்றது. நமது தசைகளில் உள்ள பிடிப்புகளை நீக்கி இதயத்திற்கு புதிய ஆக்சிஜனை கொண்டு செல்ல இந்த பயிற்சி உதவுகிறது.
நீங்கள் நடக்கும் போது எரிக்கப்படும் புரதச்சத்து நடக்கும் கால்களுக்கு வலுவூட்டுவதாக அமைகின்றது. தினசரி விடியற்காலையில் நாம் நடைப்பயிற்சியில் ஈடுபடும் போது உங்கள் உடம்பில் ஆக்சிஜனின் தேவை அதிகமாகிறது. இதனால் நாம் வழக்கத்தைவிட அதிக அளவில் கொட்டாவி விடுகின்றோம்.
நீங்கள் நடக்க துவங்கும் போது உங்கள் உடம்பு அதிக ஆக்சிஜன் உள்ளிழுத்து உடல் முழுதும் பரப்புகின்றது. நடப்பதால் கால்களில் அதிக அளவில் ஆக்சிஜனும் சென்றடைகின்றது. இதனால் கால்கள் வலுவடைகின்றன.
தினமும் நடப்பதன் மூலம் தசைகள் உறுதியடைவதுடன், தேவையற்ற கொழுப்புக்களும் வெளியேற்றப்படுகிறது. கெண்டைக் கால் மற்றும் தொடைகளில் உள்ள அதிகபட்ச கொழுப்பை கரைத்து தசைகளை உறுதிப்படுத்துகின்றது.
இதனால் தளர்வாக இருக்கும் தசைகள் இறுகி உறுதிப்படுகின்றன. இதனால் கால் தசைகள் வலுவடைகின்றன. இது கால் முழுவதையும் சீர் செய்து உறுதிப்படுத்துகிறது

No comments:
Post a Comment