Monday, December 30, 2013

தோள்பட்டை வலுவடைய செய்யும் பயிற்சி

தோள்பட்டை வலுவடைய செய்யும் பயிற்சிதோள்பட்டை வலுவடைய செய்ய சீட்டட் ரோ (Seated Row) என்ற பயிற்சி சிறந்தது. இந்த பயிற்சி செய்ய நாற்காலியின் விளிம்பில் நேரமாக அமர்ந்து கொள்ளவும். முழங்கால்களை மடங்கியிருக்குமாறும், பாதங்கள் தரையில் சற்றே அகலமாக இருக்குமாறும் உங்களுக்கு முன் வையுங்கள்.பயிற்சிக்கான பாண்டை உங்கள் பாதத்தை குறுக்கு நெடுக்காக சுற்றிக்கொண்டு இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கைகள் இரண்டையும் துடுப்பு போடுவது போல வளைத்து இழுக்கவும். 

இந்த செயலின் போது தோள்பட்டைகள் இரண்டிற்கும்
அழுத்தம் தருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மெதுவாக கைகள் இரண்டையும் துவக்க நிலைக்கு கொண்டு வரவும். இவ்வாறு 20 நிமிடம் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் 20 நிமிடம் செய்து வந்தால் உங்கள் தோள்பட்டை நன்கு வலிமை அடைவதை காணலாம்.

No comments: