Monday, December 30, 2013

கைகளுக்கு வலிமை தரும் வால் புஷ்-அப்ஸ் பயிற்சி

கைகளுக்கு வலிமை தரும் வால் புஷ்-அப்ஸ் பயிற்சிகைகளுக்கு வலிமை தர பல பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலன் தரக்கூடியவை. அவற்றுள் ஒன்று தான் இந்த வால் புஷ் அப்ஸ் பயிற்சி. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நிலையான, சமதளமாக உள்ள சுவற்றுக்கு நேராக, சுவரும் - தரையும் இணையும் இடத்தில் இருந்து சற்றே தள்ளி நிற்கவும். முன்பக்கமாக சாய்ந்து, சுவற்றின் சமதளத்தில் உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும். இந்த செயலின் போது உங்கள் முழங்கைகள் இரண்டும் முறுக்கிக் கொள்ளமால் நேராக இருக்க வேண்டும். உடல் பகுதி முழுமையும் ஈடுபடும் வகையில், உங்களுடைய மூக்கு சுவரைத் தொடும்
வரையிலும் உங்களுடைய முழங்கைகள் இரண்டையும் வளைக்கவும். 

மெதுவாக உங்களுடைய ஆரம்ப நிலைக்கு கொண்டு வந்து விட்டு, மீண்டும் ஒரு முறை முழுமையாக முயற்சி செய்யவும். இவ்வாறு இந்த பயிற்சியை 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கைகள் நல்ல வலிமை அடைவதுடன், கைகளில் உள்ள அதிகப்படியாக சதையும் குறையும்.

No comments: