Tuesday, December 31, 2013

இதய நோய் வராமல் தடுக்கும் மெல்லோட்டம்

இதய நோய் வராமல் தடுக்கும் மெல்லோட்டம்30 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் உடற்பயிற்சி அவசியம். வயதானவர்களுக்கு நடைபயிற்சி மற்றும் மெல்லோட்டம் போன்ற பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதுமானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தினமும் 30 நிமிடம் மெல்லோட்ட பயிற்சியை செய்து வந்தால் இதய நோய் வராமல் தடுக்கலாம். மேலும் மெல்லோட்டம் செய்வதால் இதயத்திற்கு கிடைக்கும் பயன்கள்
என்னவென்று பார்க்கலாம். 

* மெல்லோட்டமானது இதயத் தசைகளை வலுவாக்குகிறது. 

* இதயம் சுருங்கி விரிவடையும் பொழுது உடலுக்கு அனுப்பும் இரத்தத்தின் அளவானது ஒவ்வொரு முறையும் அதிகமாகிறது. 

* இரத்தக் குழாய்கள் அமைப்புக்களையும், சுற்றியுள்ள திசுக்களையும் வலுவாக்குகின்றது. 

* இரத்தக் குழாய்களின் அகப்புறத்தில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது. 

* இரத்த அழுத்த அளவைக் குறைக்கத் துணை செய்கிறது. 

* இரத்த ஓட்டம் அதிகமாவதால் குறிப்பாக இதயத்தைச் சூழ்ந்துள்ள இரத்தக் குழாய்களில் ஓடும் இரத்தத்தின் அளவு அதிகமாவதால் - இதய இரத்தக் குழாய்களில் குருதி உறைந்து இதயத்தாக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது. 

* இரத்தத்திலுள்ள கொலஸ்டிரால் அளவை மட்டுமல்ல டிரைகிளிசிராய்டு அளவையும் குறைக்கத் துணைபுரிகின்றது. இதனால் இதயத் தாக்கத்திற்கு ஆளாகும் வாய்ப்பு பெரிதும் குறைகின்றது.

No comments: